என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே நடந்த மாட்டு திருவிழாவில் பங்கேற்ற பாகுபலி காளையுடன் செல்பி எடுத்துக்கொண்ட வாலிபர்கள்.
மாட்டுத்திருவிழாவில் பங்கேற்ற பாகுபலி காளை
- மாடுகள் அலங்கரிக்கப்பட்டு விற்பனைக்காக அழைத்து வரப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
- பாகுபலி என்ற பெயரிலான காளை மாடு அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
ஓசூர்,
ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே, 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சப்பளம்மா தேவி கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.
மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஒரு வார காலம் நடைபெறும் இந்த விழாவில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் அலங்கரிக்கப்பட்டு விற்பனைக்காக அழைத்து வரப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
நேற்று, கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள ஒயிட்பீல்ட் பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட பாகுபலி என்ற பெயரிலான காளை மாடு அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இதனை பார்த்து பொதுமக்கள் வியந்து ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியை சேர்ந்த முரளி(32) என்பவர் இந்த காளை மாட்டினை வளர்த்து வருகிறார். மற்ற மாடுகளை விட, பாகுபலி காளையை தூய்மையான பகுதியில் வளர்ப்பதாகவும் பருத்திக்கொட்டை, புண்ணாக்கு என மாதம் 30,000 ரூபாய் வரை செலவிட்டு பராமரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், பாகுபலி மாட்டினை ரூ.5 லட்சம் வரை பணம் கொடுத்து வாங்க பலர் முன்வந்தாலும், நான் விற்க விரும்பவில்லை.
தனக்கான அடையாளத்தை பாகுபலி உருவாக்கியிருப்பதாக அவர் கூறினார்.






