search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் அருகே   விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணியை யூனியன் சேர்மன் பொன் முத்தையாபாண்டியன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.


    வாசுதேவநல்லூர் அருகே விழிப்புணர்வு பேரணி

    • தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இத்திட்டத்தினை செயல்படுத்த அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் தங்களது பங்களிப்பினை முழுமையாக அளிக்க வேண்டும்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக 'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கலெக்டர் அறிவுரை

    இத்திட்டத்தினை செயல்படுத்த அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் தங்களது பங்களிப்பினை முழுமையாக அளிக்க வேண்டும். இதன் மூலம் நமது மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்றலாம். தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னோடி மாவட்டமாக நமது மாவட்டம் திகழவேண்டும். மேலும், கடைகளிலுள்ள குப்பைகளை தெரு ஓரங்களில் மற்றும் திறந்தவெளியில் கொட்டாமல், அதற்கென அமைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்தெடுத்து போட வேண்டுமெனவும், காந்தி ஜெயந்தி விழாவினை முன்னிட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு பங்களிப்பினை அளிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.

    பேரணி

    இதனைத் தொடர்ந்து வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நெல்கட்டும்செவல் மற்றும் தலைவன்கோட்டை ஊராட்சிகளில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் நெல்கட்டும்செவல் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜா, துணைத்தலைவர் முத்து ப்பாண்டி, தலைவன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சர்மிளா, துணைத்தலைவர் குபேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜெயராமன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×