search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் கலை நிகழ்ச்சிகள் மூலம் வன விலங்குகள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு
    X

    கலை நிகழ்ச்சிகள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கொடைக்கானலில் கலை நிகழ்ச்சிகள் மூலம் வன விலங்குகள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு

    • அண்மைக்காலமாக கொடைக்கானல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் மனித, விலங்கு மோதல்களும், காட்டு யானை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் பொதுமக்களை தாக்கி உயிர் இழக்கும் சூழலும் ஏற்பட்டு வருகிறது.
    • நிகழ்ச்சியில் வன விலங்குகளுக்கு உணவளிக்க கூடாது, வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுப்பது குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக விளங்கி வருகிறது. இங்கு பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே உள்ளது . இந்த வனப் பகுதியில் பல்வேறு அரிய வகை வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அண்மைக்காலமாக கொடைக்கானல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் மனித, விலங்கு மோதல்கள் நடைபெற்று வருகிறது.

    காட்டு யானை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் பொதுமக்களை தாக்கி உயிர் இழக்கும் சூழலும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுப்பது குறித்து கொடைக்கானல் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளாக இருக்கும் மோயர் சதுக்கம் , குணா குகை, பைன் மர காடுகள், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் வன விலங்குகளுக்கு உணவளிக்க கூடாது, வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுப்பது குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகளும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×