search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறில் விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்ட காட்சி.

    கயத்தாறில் விழிப்புணர்வு பேரணி

    • வாரச் சந்தை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
    • பேரணியை பேரூராட்சி மன்ற தலைவி சுப்புலக்ஷ்மி ராஜதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கயத்தாறு:

    கயத்தாறு பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நமது குப்பை, நாமே என்ற வாசகத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியை பேரூராட்சி மன்ற தலைவி சுப்புலக்ஷ்மி ராஜதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி மன்ற நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன் மற்றும் கவுன்சிலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 40 பேர், அலுவலக தூய்மைப் பணியாளர்கள் 60 பேர், சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

    பேரணி கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டு விமான சாலை, மதுரை மெயின் ரோடு, புதிய பஸ் நிலையம், வாரச்சந்தை வளாகம் உட்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக பேரணி கையில் விளம்பரத் தட்டிகளை வைத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பிக் கொண்டு சென்றனர்.

    வாரச் சந்தை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். அங்கு துப்புரவு பணிகளை பேரூராட்சி மன்றத் தலைவர் தொடங்கி வைத்தார்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள் செய்தனர்.

    Next Story
    ×