என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பிறகான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
- பெண் குழந்தை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- பெண்கள் பள்ளி, வாச்சாத்தி பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்
அரூர்,
காவல்துறை சார்பில் அரூரில் பெண் குழந்தை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அரூர் அரசு பெண்கள் பள்ளி, வாச்சாத்தி பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கு துணை காவல் கண்காணிப்பாளர் பெனசீர் பாத்திமா வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். தன்னம்பிக்கை பேச்சாளர் டாக்டர் ஜெகன் கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறைகள், பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள், சமூக ஊடகத்தில் பரிமாற வேண்டியவை, சொல்ல கூடாத விஷயங்கள், அறிமுகம் இல்லாத நபர்களிடம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் ஏ.டி.எஸ்.பி. இளங்கோ, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, பள்ளிகளின் துணை ஆய்வாளர் பொன்னுசாமி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செல்வம், சரவணன், இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணதாஸ், மஞ்சுளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.