என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
  X

  ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முன்னாள் ஊர் காவல் படை வீரர் ஆட்டோ ஓட்டி வந்தார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பல்லடம் :

  பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் சந்திரன்(வயது 30).முன்னாள் ஊர் காவல் படை வீரரான இவர் தற்போது பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில்ஸ் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய அவர் தனது அறைக்குள் தூங்கச்சென்றதாக கூறப்படுகிறது.

  சம்பவத்தன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் விட்டத்தில் கயிறால் தூக்கு போட்டு தொங்கியதாக கூறப்படுகிறது.

  தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சந்திரனின் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து அவரது தந்தை சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×