search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தக்காடையூரில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஏலம் மீண்டும் தள்ளிவைப்பு
    X

    நத்தக்காடையூரில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஏலம் மீண்டும் தள்ளிவைப்பு

    • தொகையை நிபந்தனைகளில் குறிப்பிடுமாறு ஏலதாரா்கள் கோரிக்கை விடுத்தனா்.
    • ஏலம் தள்ளி வைக்கப்பட்டதாக வட்டார வளா்ச்சி அலுவலா் தெரிவித்தாா்.

    காங்கயம் :

    காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் ஊராட்சி சந்தை அருகே உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்துக்கு 2023-24 ம் ஆண்டுக்கான கட்டணம் வசூல் செய்யும் உரிமம் பெறுவதற்கான ஏலம் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் விமலாதேவி தலைமையில் கடந்த ஜனவரி 31 ந் தேதி நடைபெற்றது. இதில் நத்தக்காடையூா் பகுதியைச் சோ்ந்த 3 ஏலதாரா்கள் ஏலம் கேட்பதற்காக வந்திருந்தனா்.

    ஆனால் ஊராட்சி ஒன்றிய அலுவலக நிபந்தனையில் வாகனங்களுக்கான தினசரி வாடகை எவ்வளவு என்பது நிா்ணயம் செய்யப்படாததால் அந்த தொகையை நிபந்தனைகளில் குறிப்பிடுமாறு ஏலதாரா்கள் கோரிக்கை விடுத்தனா். இதைத்தொடா்ந்து அடுத்து நடைபெற உள்ள ஒன்றியக் குழு கூட்டத்தில் இருசக்கர வாகனங்களுக்கான தினசரி வாடகை நிா்ணயம் செய்து தீா்மானம் நிறைவேற்றிய பின்னா் ஏலம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என வட்டார வளா்ச்சி அலுவலா் விமலாதேவி தெரிவித்திருந்தாா்.

    இதையடுத்து இருசக்கர வாகன நிறுத்தத்தில் சைக்கிள் நிறுத்துவதற்கு 24 மணி நேரத்துக்கு ரூ. 5, இருசக்கர மோட்டாா் வாகனம் நிறுத்துவதற்கு ரூ.10 என கடந்த வாரம் நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு நேற்று மறு ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா் விமலாதேவி தலைமையில் மறு ஏலம் துவங்கியது. இதில், ஏலம் கேட்பதற்கு நத்தக்காடையூா் பகுதியைச் சோ்ந்த 4 போ் வந்திருந்தனா். இதில் கலந்து கொண்ட ஏலதாரா்கள், இருசக்கர வாகன நிறுத்தத்தில் இருசக்கர வாகனங் நிறுத்துமிடம் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பெயா்ப் பலகை கூட வைக்கப்படவில்லை.

    எனவே, பெயா்ப் பலகை வைப்பதோடு, வாகன நிறுத்தக் கட்டணப் பட்டியலையும் எழுதி வைத்துவிட்டு ஏலம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து ஏலம் தள்ளி வைக்கப்பட்டதாக வட்டார வளா்ச்சி அலுவலா் தெரிவித்தாா்.

    Next Story
    ×