என் மலர்
உள்ளூர் செய்திகள்

வளசரவாக்கத்தில் விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்- வாலிபர் கைது
- வளசரவாக்கம் சுப்பிர மணியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ்.
- கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
போரூர்:
வளசரவாக்கம் சுப்பிர மணியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மனைவி மாரியம் மாள். இவர்களது மகன் சரண் (35). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
சரண் மதுபோதைக்கு அடிமையாகி கடந்த 2 ஆண்டுகளாக போதை மறுவாழ்வு மையம் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே வீட்டில் ரகளையில் ஈடுபட்டு வந்த சரண் நேற்று இரவு தாய், தந்தை மற்றும் சகோதரியை அடித்து வீட்டை விட்டு வெளியே விரட்டி கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.
இதையடுத்து சரணின் தாய் முனியம்மாள் வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் முனுசாமி விசாரணை நடத்திக் கொண்டிருந்தார் அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த சரண் திடீரென சப் -இன்ஸ்பெக்டர் முனுசாமியை சரமாரியாக தாக்கி மாடி படிக்கட்டில் இருந்து கீழே தள்ளிவிட்டார் இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
பின்னர் அங்கு வந்த கூடுதல் போலீசார் மற்றும் தீயனைப்பு துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சரணை பிடித்து கீழ்ப்பாக்கம் அரசு மனநல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப் - இன்ஸ்பெக்டர் முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் சரண் மீது 5பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.






