என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வலம்புரிவிளை குப்பை கிடங்கில்  7 நாட்களுக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது
  X

  வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 7 நாட்களுக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கன்னியாகுமரி, நாகர்கோவில், திங்கள்சந்தை பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
  • ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீ அணைக்கும் பணி நடந்தது.

  நாகர்கோவில், ஜூன்.30-

  நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. சூறைக்காற்றும் வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

  இதையடுத்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திங்கள்சந்தை பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீ அணைக்கும் பணி நடந்தது. 7 நாட்களாக நடந்த தீயணைக்கும் பணி நேற்று நிறைவு பெற்றுள்ளது.

  Next Story
  ×