என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் ரூ.1.97 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் வழங்கினார்
  X

  ஒகேனக்கல் ஆடி பெருக்கு விழாவினை முன்னிட்டு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் சாந்தி, எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே. மணி, வெங்கடேஸ்வரன், சப்-கலெக்டர் சித்ரா விஜயன், தடங்கம் சுப்பிரமணி, பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் உள்பட பலர் உள்ளனர்.

  ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் ரூ.1.97 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் வழங்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 114 பயனாளிகளுக்கு ரூ.77.48 லட்சம் மதிப்பீட்டில் இணைய வழி இலவச வீட்டு மனை பட்டாக்க்கான ஆணைகள் உள்பட நிவாரண உதவித்தொகைகளுக்கான காசோலைகளும் வழங்கினார்.
  • அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க 20-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

  பென்னாகரம்,

  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா-2022 சிறப்பாக நடைபெறுகின்றது.

  இதனை முன்னிட்டு ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா பல்துறை பணிவிளக்க முகாம் கண்காட்சி தொடக்க விழா மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

  இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இதனை தொடர்ந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வருவாய்த்துறையின் சார்பில் 114 பயனாளிகளுக்கு ரூ.77.48 லட்சம் மதிப்பீட்டில் இணைய வழி இலவச வீட்டு மனை பட்டாக்க்கான ஆணைகள், விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிவாரண உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிவாரண உதவித்தொகைகளுக்கான காசோலைகளும் வழங்கினார்.

  இதையடுத்து பண்ணை சாரா தொழிற்கடன் உதவிகள், உற்பத்தியாளர் குழு நிதி உதவிகளும் என மொத்தம் 4522 பயனாளிகளுக்கு ரூ.1,97,09,388- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விதமாக விழா மேடையில் 40 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

  முன்னதாக, அமைச்சர் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சியினை தொடங்கி வைத்து, சுற்றுலாத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, பட்டு வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம், உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க 20-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

  விழாவில் தருமபுரி சப்-கலெக்டர் சித்ரா விஜயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கவிதா, கூத்தப்பாடி ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×