என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை படத்தில் காணலாம்.
ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி
- இங்கு வெளிநாடு, வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
- எங்களுக்கு வாக னங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லாததால் வாகனங்களை தொலை தூரத்தில் நிறுத்தி விட்டு வரும் நிலை மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
ஒகேனக்கல்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்து உள்ள ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாகும்.
இங்கு வெளிநாடு, வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக பல மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா பகுதியில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று ஒகேனக்கல் வந்தனர்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாமல் ஒரு கிலோ மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் வரை தள்ளி வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து வரும் நிலை ஏற்பட்டது.
இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும் பொழுது தொலைதூரத்தில் இருந்து நாங்கள் இங்கு வருகிறோம்.
எங்களுக்கு வாக னங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லாததால் வாகனங்களை தொலை தூரத்தில் நிறுத்தி விட்டு வரும் நிலை மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
எனவே ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். மிகவும் பிரசித்தி பெற்ற ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லாதது மக்களிடையே பெரிதும் கவலையை உண்டாக்குகிறது.






