என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுப்பிரமணி  கார்டனில்    சிவவிஷ்ணு கோவில் மண்டல அபிஷேகம் நிறைவு விழா
    X

    சிவவிஷ்ணு கோவில் மண்டல அபிஷேகம் நிறைவு விழா நடந்தது.

    சுப்பிரமணி கார்டனில் சிவவிஷ்ணு கோவில் மண்டல அபிஷேகம் நிறைவு விழா

    • சுப்பிரமணி கார்டனில் சிவவிஷ்ணு கோவில் 48-ம் நாள் மண்டல அபிஷேகம் நிறைவு விழா நடைபெற்றது.
    • மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் கடந்த ஜூன் 13-ந் தேதி விமர்சையாக நடந்தது.

    விழுப்புரம்:

    இ.எஸ்., கார்டன் கோவில் வளாகத்தில் உள்ள சிவ விஷ்ணு, விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமி, ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி சிவதுர்க்கை, சனீஸ்வர கோவில் கலசங்களுக்கு காலை 6.45 மணிக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் கடந்த ஜூன் 13-ந் தேதி விமர்சையாக நடந்தது.

    அப்போது கோவில் நிர்வாகிகள் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், காளிதாஸ், திருப்பதி பாலாஜி, பாலகிருஷ்ணன், சிவகுமார், கிருஷ்ணமூர்த்தி, தயானந்தம், இ.எஸ்., பாஸ்கர், அசோக்குமார், பாபு, கார்த்தி, தமிழ் கல்லூரி முன்னாள் முதல்வர் சற்குணம், தொழிலதிபர் சிவா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து தினசரி பூஜையில் சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், தேன் ஆகிய நறுமணப் பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் வழிபாடுகள் நடந்தது. இன்று 48-ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா சிறப்பாக நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை அமிர்தகணபதி சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் சுப்பிரமணியன், விழா குழுவினர் மற்றும் பகுதி வாழ் பொதுமக்கள் ஆகியோர் செய்தனர்.

    Next Story
    ×