என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தை தினம்
- சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டது.
- தொடுதல் பற்றிய விழிப்புணர்வு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
கம்பைநல்லூர்,
கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டது. இதில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றிய விழிப்புணர்வு ஆகியவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் பெண் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
விழாவில் ஸ்ரீராம் பள்ளியின் தாளாளர்கள் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன், பள்ளியின் நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, சன்மதி ராஜாராம் மற்றும் பள்ளி முதல்வர் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டி பெண் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்தனர்.
Next Story