என் மலர்
உள்ளூர் செய்திகள்

விடுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட போது எடுத்த படம்.
ராயக்கோட்டை விடுதியில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
- நேற்றிரவு விடுதியில் இருந்த மாணவர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர்.
- குருபிரகாஷ் அறை மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது39). இவரது மனைவி தீபா. இவருக்கு குருபிரகாஷ் (15), மனோ (14) ஆகிய 2 மகன்கள் உள்ளன. தீபா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016 ஆண்டு இறந்தார். குருபிரகாஷ் கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அரசு மாணவர் விடுதியில் தங்கி அங்குள்ள உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் விடுமுறை தினமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சொந்த ஊருக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த 10 நாட்களாக குருபிரகாஷ் வீட்டிற்கு வரவில்லை. தாய் இறந்ததால் குருபிரகாஷ் மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது.
நேற்றிரவு விடுதியில் இருந்த மாணவர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். பின்னர் இன்றுகாலை எழுந்துபார்த்த போது குருபிரகாஷ் அறை மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ராயக்கோட்டை போலீசாருக்கும், ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா, ஆதிதிராவிடர் நல அலுவலர் கனகராஜ், தாசில்தார் சரவணகுமார், டி.எஸ்.பி. சிவலிங்கம், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி நாகராஜ் ஆகியோர் விரைந்து வந்தனர்.
மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






