என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல் அய்யம்பாளையத்தில் தாழ்வான மின்மாற்றியால் விபத்து அபாயம்
- அய்யம்பாளையம் இந்த கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலையோரம் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- மின்மாற்றி தாழ்வாக அமைந்துள்ளதால் பல நேரங்களில் தரைப்பகுதியில் மின்சார தாக்கம் உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் நாமக்கல் அய்யம்பாளையத்தில்
தாழ்வான மின்மாற்றியால் விபத்து அபாயம் அமைந்துள்ளது. இந்த கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலையோரம் மின்மாற்றி அமைக் கப்பட்டுள்ளது.
இந்த மின் மாற்றி சாலை மட்டத்துக்கு அமைந்துள்ளது. சாலை உயரம் அதிக படுத்தும்போது மின்மாற்றியின் உயரம் குறைந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மின்மாற்றி தாழ்வாக அமைந்துள்ளதால் பல நேரங்களில் தரைப்பகுதியில் மின்சார தாக்கம் உள்ளது. மின்மாற்றியால் விபத்து அபாயம் நிலவி வருவதால், மின்மாற்றியை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






