search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டம் நாகாவதி அணையில்  சரியாக பராமரிக்கபடாததால் ஷட்டர் உடைப்பு ஏற்பட்டு வீணான தண்ணீர்  -விவசாயிகள் வேதனை
    X

    தருமபுரி மாவட்டம் நாகாவதி அணையில் ஷட்டர் உடைந்து கிடப்பதை காணலாம்.

    தருமபுரி மாவட்டம் நாகாவதி அணையில் சரியாக பராமரிக்கபடாததால் ஷட்டர் உடைப்பு ஏற்பட்டு வீணான தண்ணீர் -விவசாயிகள் வேதனை

    • விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாக மாறியது.
    • அணையில் இருந்த தண்ணீர் முழுவதும் வீணாக சென்று விட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள நாகாவதி அணையின் கொள்ளளவு 24 அடி. இந்த அணை கடந்த 1987-ம் ஆண்டு 313 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழக அரசால் கட்டப்பட்டது. இந்த அணையை நம்பி பெரும்பாலை, சாமதாள், அரகானஅள்ளி, சிடுவம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்ட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 1,993 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது.

    இங்கு ராகி, சாமை, கரும்பு, நெல், கடலை, சோளம், மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாது அணையை நம்பி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கால்நடைகள் வளர்ப்பு, மீன் பிடி தொழிலில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த அணை நிரம்பும் சமயத்தில் அங்குள்ள வடது மற்றும் இடது கால்வாய் வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

    இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக அணை நிரம்பாததால் அணையின் பாசன வசதி இல்லாமல் விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாக மாறியது. இதனால் விவசாயத்தை நம்பியிருந்த விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பிழைப்பு தேடி அண்டை மாநிலம் மற்றும் அண்டை மாவட்டங்களுக்கு கூலி வேலைக்கு சென்ற நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நாகாவதி அணை தனது முழுகொள்ளவை எட்டியது. இதனால் பொது பணி துறையினர் கடந்த மே மாதம் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டனர்.

    இந்நிலையில் காலை யில் திறந்து விடும் ஷட்டர் மாலை மீண்டும் அடைத்து விடுவார்கள். மேலும் ஷட்டர் சரியாக பராமரிக்கபடாததால் உடைப்பு ஏற்பட்டு அணையில் இருந்த தண்ணீர் முழுவதும் வீணாக சென்று விட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் செய்வது தெரியாமல் இருந்து வருகின்றனர்.

    தற்போது அணையில் இருந்த ஷட்டரை எடுத்து அணையின் நடை பாதையில் பொது பணி துறையினர் வைத்துள்ளனர். ஷட்டர் உடைந்து தண்ணீர் வீணானதால் கடல் போல் காட்சியளித்த நாகாவதி அணை தற்போது குட்டை போல் காட்சியளிக்கிறது. இந்த அணையை நம்பி இருக்கும் விவசாயிகள் விரைவில் மழை காலம் தொடங்க உள்ளதால் உடைந்து போன ஷட்டரை பொது பணி துறையினர் சரி செய்து தர வேண்டும்.

    என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×