search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதேமங்கலம் கிராமத்தில்   ஸ்ரீ தீப்பாஞ்சியம்மன்   மகா கும்பாபிஷேக விழா
    X

    மாதேமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ தீப்பாஞ்சியம்மன் மகா கும்பாபிஷேக விழா

    • வாசனம், வாஸ்து ஹோமம், கங்கணம் கட்டுதல் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மாதேமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ தீப்பாஞ்சியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது.

    இதற்கு முன்னதாக கடந்த 28ஆம் தேதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு மேல் கணபதி பூஜை,புண்யாஹ வாசனம், வாஸ்து ஹோமம், கங்கணம் கட்டுதல் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 29 ம் தேதி ஐந்து நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் முளைப்பாரி நிகழ்ச்சியும் இரவு மகா கணபதி, சுப்ரமணியசாமி, தீப்பாஞ்சம்மன், மலையப்பன், பாப்பாத்தி அம்மன், மற்றும் நவகிரக மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றி மகா பிரதிஷ்டை நடைபெற்றது.

    30 ம் தேதி விடியற்காலை காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், சுப்பிரமணிய ஹோமம், ஸ்ரீ தீப்பாஞ்சம்மன், மலையப்பன், மற்றும் பாப்பாத்தி அம்மன் சாமிகளுக்கு ஹோமம், நவகிரக ஹோமம், துர்கா ஹோமம், ஹிரண்ய கால ஹோமம், நடைபெற்றது. காலை ஆறு முப்பது மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க சுவாமிகளின் தீர்த்த குடம் புறப்பாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து 7 மணி முதல் 7.30 மணிக்கு குருக்கள் தீர்த்த குடம் எடுத்து வந்து ஸ்ரீ பாஞ்சி அம்மன் மலையப்பா சாமி பாப்பாத்தி அம்மன் சாமிகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை தலைவர் குப்புசாமி, கப்பல் துறை கண்காணிப்பாளர், கௌரவ தலைவர் பிரகாஷ் ஸ்ரீ கிருஷ்ணா ரியல் எஸ்டேட், செயலாளர் அன்பரசன், மதன்குமார், மற்றும் கும்பாபிஷேக விழா நிர்வாக குழு உறுப்பினர்கள் சுந்தரம், கந்தசாமி, மாணிக்கம், பெருமாள், சுந்தரம் எக்ஸ் ஆர்மி, பொன்ராஜ், ராஜாராம், மகாலிங்கம், சத்தியசேகர், கணேசன், முருகவேல், ரவிச்சந்திரன், அம்பேத்வளவன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் இவ்விழா வினை தலைமை ஏற்று நடத்தி வைத்தனர்.

    Next Story
    ×