search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாசு கட்டுப்பாடு வாரிய கூட்டரங்கில்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்   பொருட்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்
    X

    தருமபுரி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக வளாகத்தில் கலெக்டர் சாந்தி மரக்கன்றுகள் நட்டு வைத்த காட்சி.

    தருமபுரி மாசு கட்டுப்பாடு வாரிய கூட்டரங்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்

    • மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெற்ற பிளாஸ்டிக் மறுசுழற்சியாளரிடம் வழங்கிட வேண்டும்.
    • மாவட்ட கலெக்டர் சாந்தி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய கூட்டரங்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை குறித்து மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத நிலையினை உருவாக்கு வதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.

    அனைத்து துறை தலைவர்களும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய தங்கள் துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சியில் அன்றாடம் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக தரம் பிரித்து பிளாஸ்டிக் மறு சுழற்சியாளரிடம் வழங்க வேண்டும்.

    மேலும் மருத்துவத்துறையின் மூலம் மாவட்டத்திலுள்ள அரசு தருமபுரி மருத்துவகல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் அன்றாடம் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெற்ற பிளாஸ்டிக் மறுசுழற்சியாளரிடம் வழங்கிட வேண்டும்.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பையின் பயன்பாட்டினை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்திட வேண்டும். தருமபுரி மாவட்டத்தை நெகிழி இல்லா மாவட்டமாக உருவாக்குவதற்கு அனைத்து அலுவலர்களும் முனைப்புடன் பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் சாந்தி பேசினார்.

    முன்னதாக, 75-வது சுதந்திர தினவிழா அமுதப்பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் சாந்தி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    இதனைதொடர்ந்து, 75 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தேசியக் கொடி மற்றும் மஞ்சப்பையுடன் கூடிய மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தருமபுரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சாமுவேல் ராஜ்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சுவாமிநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×