search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி புத்திகே மடத்தில்  ராகவேந்திர சாமிக்கு ஆராதனை விழா
    X

    50 தம்பதியினர் ராகவேந்திர சுவாமிக்கு கனக பூஜை செய்த போது எடுத்த படம்.

    தருமபுரி புத்திகே மடத்தில் ராகவேந்திர சாமிக்கு ஆராதனை விழா

    • விழாவின் முக்கிய தினமான மத்ய ஆராதனையான நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • பல்லக்கு உற்சவமும், வெள்ளி ரத உற்சவமும், 50 தம்பதியினர் பங்கு பெற்ற கனக பூஜையும் நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி விருபாட்சிபுரம், உடுப்பி ஸ்ரீ புத்திகே மட கிளையில், ஸ்ரீ ராகவேந்திர சாமியின் 351-வது ஆண்டு ஆராதனை மகோத்சவ விழா நடந்தது.

    புத்திகே மடாதிபதி பூஜ்யஸ்ரீ சுகுணேந்திர தீர்த்த சாமி தொடங்கி வைத்தார்.

    கடந்த 11-ந்தேதி கொடியேற்றமும், கோ பூஜையும் நடைபெற்றது. ஸ்ரீ சத்யநாராயண சாமி பூஜை, ஸ்ரீ ராகவேந்திர சாமிக்கு பூர்வ ஆராதனை விழா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய தினமான மத்ய ஆராதனையான நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்லக்கு உற்சவமும், வெள்ளி ரத உற்சவமும், 50 தம்பதியினர் பங்கு பெற்ற கனக பூஜையும் நடைபெற்றது. கனக பூஜையின் போது 1008 ராகவேந்திர சுவாமியின் நாமாவளிக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.

    இன்று உத்ர ஆராதனையும் நடந்தது. நாளை 15-ந் தேதி கணபதி ஹோமமும், ஸ்ரீ சுக்ஞானேந்திர தீர்த்தர் ஆராதனையும் நடக்கிறது.

    ஆராதனை நிகழ்ச்சி களுக்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டி தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் ஆர்.வெங்கட்ராமன், கிருஷ்ணன், வி.ராமமூர்த்தி, டி.வி.சீனிவாசன், உடுப்பி புத்திகே மடத்தின் நிர்வாகிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×