search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடுதுறையில், அனைத்து வசதிகளுடன் கூடிய உழவர் சந்தை அமைக்கப்படும்
    X

    ஆடுதுறை பேரூராட்சி கூட்டம் தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

    ஆடுதுறையில், அனைத்து வசதிகளுடன் கூடிய உழவர் சந்தை அமைக்கப்படும்

    • ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் திறந்தவெளி மழைநீர் வடிகால் பகுதிகளில் மூடி அமைத்தல் பணி.
    • ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்தல்.

    திருநாகேஸ்வரம்:

    ஆடுதுறை பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    துணை தலைவர் கமலா சேகர் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக செயல் அலுவலர் ராம்பிரசாத் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினர்.

    ஆடுதுறை பேரூராட்சி அலுவலக பயன்பாட்டிற்காக ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவறை மற்றும் எரிபொருள் வைப்பறை அமைத்தல், 3-வது வார்டு ஆதிதிராவிடர் தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்தல், ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் ஆர்.ஆர் பார்க் பகுதியில் சுற்றுச்சுவர் அமைத்தல், பேரூராட்சி உள்விளையாட்டு அரங்கம், டானரி தெரு பகுதியில் ரூ. 12.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், கால்நடை மருத்துவமனை அருகிலும், உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.9.15 லட்சம் மதிப்பீட்டில் சிறிய மின் விசை பம்புடன் கூடிய ஆழ்குழாய் கிணறு அமைத்தல், நடராஜபுரம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி அருகே ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் திறந்தவெளி மழைநீர் வடிகால் பகுதிகளில் மூடி அமைத்தல் பணி,

    டானரித்தெரு ,மருத்துவக்குடி, பாத்திமாநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.7.65 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரித்தல் மற்றும் பழுது நீக்கம் பணிகள், கஞ்சான் மேட்டுத்தெரு மற்றும் கிருஷ்ணன் கோயில் தோப்பு தெருவை இணைக்கும் இணைப்பு பாலம் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் இருபுறமும் தடுப்புச் சுவருடன் புதிய பாலம் அமைக்கும் பணி, புது முஸ்லீம் தெருவில் ரூ.6.20லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவருடன் கூடிய சிறுபாலம் அமைத்தல் பணி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் முடிவடைந்த பணிகள் குறித்தும் தற்போது மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டன.

    கூட்டத்தில் ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு தரமாகவும் விலை மலிவாகவும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர பொருட்கள் கிடைப்பதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளுடன் கூடிய உழவர் சந்தை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் வார்டு கவுன்சிலர்கள் முத்துபீவி ஷாஜஹான், மீனாட்சி முனுசாமி, சரவணன், செல்வராணி சிவக்குமார், இளங்கோவன், சுகந்தி சுப்ரமணியன், சாந்தி குமார், ஷமீம் நிஷா ஷாஜஹான், கண்ணன், பால் தண்டாயுதம், மாலதி சிவக்கொழுந்து, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பரமேஸ்வரி சரவணக்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×