என் மலர்
உள்ளூர் செய்திகள்

கங்கா பூஜை செய்து வழிபட்ட பக்தர்கள்.
ஆத்துக்கொட்டாய் கிராமத்தில் கங்கா பூஜை செய்து வழிபாடு
- ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் சின்னாற்றில் கங்கா பூஜை செய்தால் மழை பொழிந்து விவசாயம் பெருகும் என்பது ஐதீகம்.
- சின்னாற்றில் இறங்கி கங்கா பூஜை செய்து, ஆற்றுநீரை வழிபட்டு கரகம் ஆடி கொண்டாடி வழிபட்டனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஆத்துக் கொட்டாய் கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி 18-ஐ முன்னிட்டு கங்கா பூஜை நடைபெறும்.
இதனையொட்டி ஆத்துக் கொட்டாய், பொப்பிடி, சென்னப்பன் கொட்டாய், செம்மன அள்ளி, பெலமாரன அள்ளி, ஆமேதன அள்ளி, சீரியம்பட்டி ஆகிய 7 கிராம மக்கள் ஆத்துக் கொட்டாயில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் ஒன்றிணைந்து, அங்கிருந்து தலையில் சாமி கரகம், பூ கரகம், காவடி, வீரபத்திர சுவாமி கரகம் உள்ளிட்டவைகளை தலையில் சுமந்து அருகே உள்ள சின்னாற்றில் இறங்கி கங்கா பூஜை செய்து, ஆற்றுநீரை வழிபட்டு கரகம் ஆடி கொண்டாடி வழிபட்டனர்.
ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் சின்னாற்றில் கங்கா பூஜை செய்தால் மழை பொழிந்து விவசாயம் பெருகும் என்பது ஐதீகம்.
அதனையொட்டி நேற்று அதிகாலை பத்ரகாளியம்மனுக்கு பல்வேறு திரவியங்கள் மற்றும் பூக்களால் அபிஷேகம் ஆரதாதனை செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.