search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேக்கோடு, காணிமடத்தில் ரூ.45 லட்சம் செலவில்   துணை சுகாதார நிலையம்
    X

    மேக்கோடு சுகாதார நிலையத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தபோது எடுத்த படம்.

    மேக்கோடு, காணிமடத்தில் ரூ.45 லட்சம் செலவில் துணை சுகாதார நிலையம்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

    கன்னியாகுமரி:

    நெய்யூர் அருகே மேக்கோடு பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், காணிமடம் பகுதியில் ரூ. 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் திறப்பு விழா மேக்கோடு துணை சுகாதார நிலையத்தில் இன்று நடந்தது.

    விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக குமரி மாவட்டம் வந்த அமைச்சர் மா. சுப்பிரமணியனை கலெக்டர் அரவிந்த் வரவேற்றார். நாகர்கோவில் சுற்றுலா மாளிகையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் தி.மு.க.வினர் அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், பெர்னாடு, ராஜன், ஒன்றிய செயலாளர் மதியழகன், மாநகர செயலாளர் ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இ.என் சங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.

    தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன், மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் ஆகியோர் அமைச்சர் மா.சுப்பிர மணியனை சந்தித்து பொன்னாடை அணிவித்தனர்.

    Next Story
    ×