search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அசுபதி தீர்த்தவாரி
    X

    தீர்த்தவாரி விழாவில் பக்தர்கள் புனிதநீராடினர்.

    திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அசுபதி தீர்த்தவாரி

    • சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • கோவில் கிணற்றில் உள்ள நீர் காசிக்கு இணையான புனிதநீராக கருதப்படுகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் பிரம்மன் உயிர் பெற்ற தலம் என்ற சிறப்புடைய ஆம்ல குஜாம்பிகா எனும் வாடா முலையாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது.

    இக்கோயில் இந்து சமய அறநிலைத் துறைக்கு சொந்தமானது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடைப்பெறுவது வழக்கம். தேவார சிறப்புமிக்க 274 திருத்தலங்களில் மூவரால் பாடப்பட்ட 44 தலங்களில் இதுவும் ஒன்றாக போற்றப்படுகிறது.

    இக்கோயிலில் உள்ள கிணற்றில் இருந்து புனிதநீரை எடுத்து வந்து தினமும் திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நாளில் கோயில் கிணற்றில் பக்தர்கள் புனித நீராடுவது சிறப்பாகும். இந்த நீர் காசிக்கு இணையான புனிதநீராக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டில் இந்த ஒரு நாள் மட்டும் கோயில் கிணற்றில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    அதேபோல் இந்த ஆண்டு நேற்று முன்தினம் அசுபதி நட்சத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதனையொட்டி ஆம்ல குஜாம்பிகா, பிரம்ம புரீஸ்வரர் ஆகிய சாமிக ளுக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயில் கிணற்றில் இருந்து வாரி இறைக்கப்பட்ட தண்ணீரில் பக்தர்கள் புனித நீராடி சாமி வழிபாடு செய்தனர்.

    இந்த தீர்த்தவாரி விழாவில் கணேச குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உள்ளூர், வெளியூர் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×