search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரத்து குறைந்ததால் தருமபுரியில் தக்காளி விலை உயர்வு
    X

    வரத்து குறைந்ததால் தருமபுரியில் தக்காளி விலை உயர்வு

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.
    • வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, இண்டூர், நாகதாசம்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, பெலமாரம்பட்டி, திருமல்வாடி, காரகூர், பாளையம், பெரியனூர், ஜக்க சமுத்திரம், கொளசன அள்ளி, காரிமங்கலம், கம்பைநல்லூர், மொரப்பூர், மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

    சாகுபடி செய்யப்படும் தக்காளிகளை கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, ஐந்து மைல்கள், ஜிட்டான்ட அள்ளி, வெளிச்சந்தை, கம்பைநல்லூர், உள்ளிட்ட தக்காளி மார்க்கெட்டிற்கு 100 டன் முதல் 150 டன் வரை தக்காளி விற்பனைக்கு வருகிறது.

    இங்கிருந்து தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கும் , கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பருவ மழை வழக்கத்தை விட குறைவாகவே பெய்தது.

    ஆனால் கடந்த ஆண்டு சராசரியை விட மாவட்டத்தில் மூன்று மடங்கு கூடுதலாக மழை பெய்ததால் விவசாய நிலங்களில் நீர் தேங்கி தக்காளி செடிகள் அழுகி சேதம் அடைந்தது. அதனால் தினசரி தக்காளி மார்க்கெட்டிற்கு தற்போது தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.

    இரண்டு நாட்களுக்கு முன்பு தருமபுரி உழவர் சந்தையில் 10 ரூபாயிலிருந்து 12 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .வெளிமார்க்கெட்டில் கிலோ தக்காளி ரூபாய் 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×