என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் வாக்குறுதியின்படி  பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்-  ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம்
    X

    மாநாட்டில் மாவட்ட தலைவர் துரை பேசிய போது எடுத்த படம்.

    தேர்தல் வாக்குறுதியின்படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்- ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

    • மாநாட்டிற்கு மாவட்ட தலைவர்துரை தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியின்போது, 75 வயது கடந்த ஓய்வூதியர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    ஒசூர்,

    தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட 4 -வது மாநாடு, ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    மாநாட்டிற்கு மாவட்ட தலைவர்துரை தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் சரவணபவன் வரவேற்றார். மண்டல தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான சீனிவாசலு தொடக்க உரையாற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் வெங்கடேசா செயல் அறிக்கையும், பொருளாளர் ரவிச்சந்திரன் வரவு, செலவு அறிக்கையும் வாசித்தனர்.

    நிகழ்ச்சியின்போது, 75 வயது கடந்த ஓய்வூதியர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. மத்திய வருமான வரித்துறை ஓய்வூதியர் சம்பங்கிராமையா, இந்தியன் வங்கி ஓய்வூதியர் சங்க தலைவர் சத்யநாராயணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    இதில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, மலைவாழ், குளிர்கால படிகள், குடும்ப பாதுகாப்பு நிதி 1.5 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மாநாட்டில் மாவட்ட தலைவராக துரை, செயலாளராகமுருகன், பொருளாளரா கரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் துணைத் தலைவர் குப்பன் நிறைவுரையாற்றினார். முடிவில் இணைச் செயலாளர் கெம்பண்ணா நன்றி கூறினார்.

    Next Story
    ×