என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் பயிற்சிக்கு அருர் பள்ளி மாணவன் தேர்வு
    X

    சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் பயிற்சிக்கு அருர் பள்ளி மாணவன் தேர்வு

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
    • அரூர் அரசு ஆண்கள் பள்ளி மாணவன் அர்ஜுன் தேர்வு பெற்றுள்ளார்.

    அரூர்,

    சென்னையில் தற்போது 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அங்கு நடைபெறும் பயிற்சி முகாமிற்கு அரூர் அரசு ஆண்கள் பள்ளி மாணவன் அர்ஜுன் தேர்வு பெற்றுள்ளார். மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற இம்மாணவர் நாளை முதல் 4 நாட்கள் சென்னையில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள உள்ளார்.

    மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார், மாவட்ட கல்வி அலுவலர் ரவி ஆகியோர் பாராட்டினர். அந்த மாணவனுக்கு அரூர் ராமு உடைகள், செஸ் போர்டு உள்ளிட்ட ஊக்க பரிசுகளை வழங்கினார். தலைமை ஆசிரியர் ஆறுமுகம், ஆசிரியர்கள் பழனிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×