என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையமான அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்தது. அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 530 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 24 ஆயிரத்து 685 பெண் வாக்காளர்களும், 4 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 48 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.
ஜெயங்கொண்டம் தொகுதியில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 645 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 26 ஆயிரத்து 526 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 171 வாக்காளர்கள் உள்ளனர். இதில் அரியலூர் தொகுதியில் 86.40 சதவீத ஆண் வாக்காளர்களும், 86.57 சதவீத பெண் வாக்காளர்களும் வாக்களித்தனர். மொத்தம் அரியலூர் தொகுதியில் 86.48 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
இதே போல் ஜெயங்கொண்டம் தொகுதியில் 79 சதவீத ஆண் வாக்காளர்களும், 83.11 சதவீத பெண் வாக்காளர்களும் வாக்களித்தனர். மொத்தம் ஜெயங்கொண்டம் தொகுதியில் 81.08 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதியை சேர்த்து அரியலூர் மாவட்டத்தில் இந்த சட்டமன்ற தேர்தலில் 83.77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.மூன்றடுக்கு பாதுகாப்புவாக்குப்பதிவு முடிந்ததும் அந்த 2 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்த அறைகளில் அடுக்கி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட உள்ளதால் அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பரவலாக மழை பெய்து வருவதால் நேற்று வாக்கு எண்ணும் மையத்திலுள்ள வளாகம் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. இதனால் போலீசார் அந்த வளாகத்தில் வாகனங்களில் சென்று வர சிரமப்பட்டனர்.
எனினும் அரசு கலைக்கல்லூரி அறைகளில் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும்பொருட்டு போலீசார் ஆங்காங்கே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. அங்கு மொத்தம் 4,98,390 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2,47,175, பெண் வாக்காளர்கள் 2,51,211. மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவுக்கு மொத்தம் 583 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்பட்டது. 2 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 83.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியது.
நேற்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் வாக்கு எண்ணும் மையமான அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இங்கு ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருகிற 19–ந்தேதி ஓட்டுகள் எண்ணப்படுகிறது.

மீதமுள்ள 2 தொகுதிகளில் தேர்தல் முடிந்த பின்னரே வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அரியலூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனூரில் வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
2 தொகுதிகளில் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த பின்னரே மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு தே.மு.தி.க-மக்கள் நலக் கூட்டணி-த.மா.க வெற்றி பெறும்.
அரவக்குறிச்சியில் ரூ.570 கோடி சிக்கிய விவகாரத்தில் அதிகார பலம் கொண்டவர்கள் தவறு செய்திருக்கலாம்.
இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் 40 நிமிடங்கள் வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக, அதிமுக கட்சிகள் நேற்று இரவு வரை பணப்பட்டுவாடா செய்துள்ளதாக கூறினார். மேலும், இருகட்சிகளின் வரம்பு மீறிய செயலை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த தவறிவிட்டது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது. இந்த இரு தொகுதிகளுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கு முன் தேர்தலை நடத்த வேண்டும்” என்றார்.

வாக்குப்பதிவு நடைபெறும்போது அடையாள அட்டை, பூத்சிலிப் இல்லாதவர்கள் மாற்று ஆவணங்கள் பயன்படுத்தலாம் என்று கலெக்டர் சரவணவேல்ராஜ் கூறினார்.
அரியலூர்:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற் கிணங்க எதிர்வரும் சட்ட மன்ற பொதுத்தேர்தல் 2016 முன்னிட்டு நாளை (16-ந் தேதி) வாக்குப்பதிவு நடைபெறும்போது அடையாள அட்டை, பூத்சிலிப் இல்லாத வாக்காளர்கள் அடையாளம் காட்ட இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சரவண வேல்ராஜ் கூறியதாவது-
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, பூத்சிலிப் இல்லாதவர்கள் 10-க்கும் மேற்பட்ட மாற்று முறை ஆவணங்கள் சமர்பித்து வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள மாற்று ஆவணங்கள் கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது),
நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப்பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்க்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச் சீட்டு மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை காண்பித்து, வாக்களிக்கலாம்.
மேலும், 100 சதவீதம் தேர்தலில் பங்கேற்று, வாக்களிக்க அரியலூர் மாவட்ட மக்கள் முன்வர வேண்டும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் கூறினார்.

அரியலூர் மாவட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் வழங்கப்படுவதற்காக வரவழைக்கப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
வருகிற சட்ட மன்ற தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரப்பெற்றுள்ள சக்கர நாற்காலிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சரவணவேல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது-
அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் 4054 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள். இது தவிற 20.01.2016 வரை 255 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
2 சட்டமன்ற தொகுதியிலுள்ள 583 வாக்குச்சாவடி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்வுப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் செல்ல ஏதுவாக சக்கர நாற்காலிகள் வழங்கப்படுவதற்காக வரவழைக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நாற்காலிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவைகள் தேர்தலுக்கு முன்னதாக உரிய வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும்.
இதுதவிர கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, பிரைலி முறையில் வாக்களிப்பது குறித்த பயிற்சிகளும், கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நல்ல வாய்புகளை பயன்படுத்தி அனைத்து மாற்றுத்திறனாளிகளும் 100 சதவீதம் தேர்தலில் பங்கேற்று வாக்களிக்க முன்வர வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சரவணவேல்ராஜ் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், தேர்தல் வட்டாட்சியர் ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜெயங்கொண்டம் அருகே தேர்தல் பறக்கும் படையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்
ஜெயங்கொண்டம் :
அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தா. பழூர் அருகே உள்ள நடுவலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 36). அ.தி.மு.க. பிரமுகரான இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கூடுதல் பறக்கும் படை பொறுப்பு அலுவலர் பொய்யாமொழி, பெண் அலுவலர் லட்சுமி மற்றும் காவலர் இளைய ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் நடுவலூரில் உள்ள பிரபாகரன் வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு உரிய ஆவணமின்றி இருந்த ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 300 பணத்தை பறிமுதல் செய்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் பிரபாகரன் அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (47), செல்வராஜ், தங்கராசு (40), கருப்பையன், மற்றொரு தங்கராசு ஆகியோருடன் வந்து தேர்தல் பறக்கும் படையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக தேர்தல் கூடுதல் பறக்கும் படை பொறுப்பு அலுவலர் பொய்யாமொழி உடையார் பாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் சரவணன் 6 பேர் மீதும் வழக்கு பதிந்து பிரபாகரன், ரவிச்சந்திரன், தங்கராசு ஆகியோரை கைது செய்தார். தப்பி ஓடிய செல்வராசு, கருப்பையன் மற்றும் தங்கராசு ஆகியோரை பிடித்து விசாரித்து வருகிறார்.

அரியலூர் மாவட்டம் தா.பழூரை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தா.பழூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த கோடங்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது52). விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும் வயிற்று வலி குணமாகவில்லை.
இந்நிலையில் கடந்த 10-ந் தேதி ராஜமாணிக்கத்திற்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் ராஜமாணிக்கத்தை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இதுகுறித்து ராஜமாணிக்கத்தின் மனைவி சாந்தி தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.