என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துணை ராணுவம் பாதுகாப்பு
    X

    அரியலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துணை ராணுவம் பாதுகாப்பு

    அரியலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. அங்கு மொத்தம் 4,98,390 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2,47,175, பெண் வாக்காளர்கள் 2,51,211. மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    வாக்குப்பதிவுக்கு மொத்தம் 583 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்பட்டது. 2 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 83.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியது.

    நேற்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் வாக்கு எண்ணும் மையமான அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இங்கு ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருகிற 19–ந்தேதி ஓட்டுகள் எண்ணப்படுகிறது.
    Next Story
    ×