என் மலர்
அரியலூர்
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும்தொழில் நிறுவனங்கள் துறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதன் மூலம் தொடங்க உள்ள தொழில்களில் உற்பத்தி பிரிவில் ரூ.5 லட்சம் வரையிலும், சேவைப்பிரிவில் ரூ.3 லட்சம் வரையிலும், வியாபாரங்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும். கடன் பெற மாவட்டத் தொழில் மைய பொது மேலாளரைக் தலைவராகக் கொண்ட தேர்வுக்குழு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக கணக்கிட்டு அதிகபட்சமாக ரூ.125000 ஆயிரம் வரை மாவட்ட தொழில் மையம் வழங்கும்.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்கள், 18 முதல் 45 வயது வரையிலும் இருக்கலாம். மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.150000 வரை இருக்கலாம்.
திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவிதமும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், மகளிர் மற்றும் அரவாணிகள் 5 சதவீதமும் தமது பங்காக செலுத்த வேண்டும். நேரடியான விவசாயம் தவிர பொருளாதார அடிப்படையில் லாபகரமான தொழில்கள் தொடங்கலாம்.
அரியலூர் மாவட்டத்திற்கு 2016-17 ம் நிதியாண்டில் 95 நபர்கள் பயன்பெற ரூ.46.875 லட்சம் மானியம் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் கேட்டு கொண்டுள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சரவணவேல்ராஜ் புத்தகங்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது :–
அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் வித்யாமந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் சு.நரேந்திரன், தளவாய் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி நிவேதா, அரியலூர் அரசுநகர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி யு.சு.சிவநந்தினி, ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ளு.சிவநந்தினி, கீழப்பழூர் சுவாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சு.சுவேதா, அரியலூர் மான்போர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆ.விஜயலெட்சுமி, ஆகிய 6 மாணவ, மாணவிகள் 496500 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தினையும், ஆலத்தியூர் வித்யாமந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி துகலைவாணி, ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக்குப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஏ.கவியனுசூர்யா, ரெட்டிபாளையம் ஆதித்ய பிர்லா மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த மாணவி சு.பிரியதர்ஷினி, மனகெதி கெளதமபுத்திரர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் சதீஸ்ராஜா, ஆலத்தியூர் வித்யாமந்திர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் சு.வெங்கடேஷ் ஆகிய 5 மாணவ, மாணவிகள் 495500 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும், செந்துறை அன்னை தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆ.புவனா, அரியலூர் மா£ன்போர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆ.தக்ஷனா, அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன்ஹரீஸ்குமார், ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஜெய்னாசனோபர், ஆண்டிமடம் புனித மார்டின் மெட்ரிக்குலேசன் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஜான்ஷிபா, ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி கமலி, அரியலூர் மான்போர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா, ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி நந்தினி, அரியலூர் மான்போர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆ.நந்தினி, ஆலத்தியூர் வித்யாமந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் நரேந்திரன், செந்துறை அன்னை தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி நதியா, ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி, அரியலூர் மான்போர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சத்யா, அரியலூர் அரசுநகர் மெட்ரிக்குலேசன் மேல்நிலை ப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் செல்வகுமார், ஆலத்தியூர் வித்யாமந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் சக்தி ஆகிய 15 மாணவ, மாணவிகள் 494500 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
இதுபோன்று, அரியலூர் மாவட்டத்தில், மான்போர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ளு.சு.வித்யா 1167ஃ1200 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தினையும், மான்போர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி வைஸ்னவி 11601200 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும், வித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா 11541200 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.47 அரசு ப்பள்ளிகளிலிருந்து 2302 மாணவர்களும், 2403 மாணவிகள் என 4705 மாணவ, மாணவிகள் தேர்வெழுதியதில் 1885 மாணவர்களும், 2177 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 86.33 சதவீதமாகும்.இவ்வா£று கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பா.லலிதாவதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள தண்டலை கிராமத்தில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் நூறுநாள் திட்டத்தில் செய்த பணிக்கு இதுவரை சம்பளம் பட்டுவாடா செய்யப்படவில்லை. கடந்த மூன்று வாரமாக தொடர்ந்து பணம் பட்டுவாடா செய்யாமல் காலதாமதம் செய்து வருகின்றனர். முறையாக சம்பளம் வழங்காததை கண்டித்து விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலை கல்லாத்தூர் கடைவீதியில் தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலறிந்த ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, ஒன்றிய ஆணையர் கலையரசு, ஊராட்சிமன்ற தலைவர் அன்பழகன், வங்கி மேலாளர் திருமாவளவன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் அவர்கள் தினம் 150 கார்டுகளுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என கூறியதன் அடிப்படையில் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம் - விருத்தாசலம் சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கபட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சரவணன் ( வயது 39). இவர் சேவகத்தெருவில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது ஜெயங்கொண்டம் மேட்டுத் தெருவைசசேர்ந்த விஜயகுமார் (50) என்பவர் தன்னிடம் உள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகளை வாங்கச்சொல்லி மிரட்டினாராம்.
இதுகுறித்து சரவணன் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் செல்லமுத்து வழக்கு பதிந்து விஜயகுமாரை கைது செய்து விசாரித்து வருகிறார்.
அரியலூர் மாவட்டத்தில் 2015–16ம் கல்வி ஆண்டிற்கான 10–ம் வகுப்பு பொதுத்தேர்வை 11539 மாணவர்கள் எழுதினார்கள். இதில் 10676 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் அரியலூர் மாவட்டம் 92.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதன் தேர்ச்சி விகிதம் கடந்தை ஆண்டைவிட 2 சதவீதம் அதிகமாகும்.
இந்த ஆண்டு 10–ம் வகுப்பு பொதுத்தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று 6 மாணவர்கள் மாவட்டத்தில் முதலிடமும், 495 மதிப்பெண்கள் 5 மாணவர்கள் மாவட்ட அளவில் 2–ம் இடமும் 494 மதிப்பெண்கள் பெற்று 15 பேர் மாவட்ட அளவில் 3–ம் இடமும் பெற்றுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:–
முதலிடம் பெற்ற மாணவர்கள் விவரம்:–
கீழப்பழூர் சாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சுவேதா, அரியலூர் மான்பூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விஜயலெட்சுமி, அரியலூர் அரசு நகர் மேல்நிலைப்பள்ளி சிவாநந்தியா, ஆலத்தியூர் வித்யா மந்திரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நரேந்திரன், தளவாய் டி.எஸ்.என்.பள்ளி நிவேதா, ஜெயங்கொண்டம் பத்திமா பெண்கள் பள்ளி சிவநந்தினி.
2–ம் இடம் பெற்ற மாணவர்கள் விவரம்:–
ஆலத்தியூர் வித்யா மந்திரி பள்ளி கலைவாணி, ஜெயங்கொண்டம் பாத்திமா பள்ளி கவிஅனுஷியா, ரெட்டிபாளையம் ஆதித்திய பிர்லா பள்ளி பிரியதர்ஷிணி, கவுதம புத்தர் பள்ளி சதீஷ்ராஜா, ஆலத்தியூர் வித்யா மந்திரி பள்ளி வெங்கடேஷ்.
3–ம் இடம் பெற்ற மாணவர்கள் விவரம்:–
செந்துறை அன்னை தெரசா பள்ளி புவனா, அரியலூர் மான்பூர் பள்ளி தட்சணா, அரியலூர் அரசு நகர் பள்ளி கரிஷ்குமார், ஜெயங்கொண்டம் பாத்திமா பள்ளி ஜெய்னா ஜினோபா, ஆண்டிமடம் ஆர்டின் பள்ளி ஜெம்சிஷிபா, ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி கமலி, அரியலூர் மான்பூர் பள்ளி கிர்த்தனா, ஜெயங்கொண்டம் பத்திமா பள்ளி நந்தினி, அரியலூர் மான்பூர் பள்ளி நந்தினி, ஆலத்தியூர் வித்தியா மந்திர் நரேந்திரன், செந்துறை அன்னை தெரசா பள்ளி நிவேதா, ஜெயங்கொண்டம் பாத்திமா பள்ளி பிரியதர்ஷிணி, அரியலூர் மான்பூர் பள்ளி சத்யா, அரியலூர் அரசு நகர் பள்ளி செல்வகுமார், ஆத்தியூர் வித்யா மந்திர் சத்தி ஆகியோர் 3–ம் இடம் பெற்றறுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் செந்துரை வட்டம் பூமுடையான் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பா, செல்லம்மாள் இவர்களின் மகள் சிவகாமி(24) இவருக்கும் ஜெயங்கொண்டம் மலங்கன் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் செல்வதுரை(33) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 2–ம் தேதி திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தில் மகளுக்கு 9 பவுன் நகை வீட்டு சாமான்கள், 90 ஆயிரம் பணம், உள்ளிட்ட சீர்வரிசைகள் செய்துருந்தனர்.
செல்வதுரை மற்றும் அவரது குடும்பத்திளளர் சேர்ந்து மேலும் 10 பவுன் நகை வரதட்சனை கேட்டு தகராறு செய்துள்ளதாகவும் இதனால் நேற்று முன்தினம் குடும்பத்தினரிடம் பஞ்சாயத்து பேசி மகளை விட்டு சென்றதாகவும் நேற்று காலை தனதுமகள் வீட்டில் தூக்குபோட்டு இறந்துவிட்டதாக செல்வதுரை தனக்கு தகவல் தெரிவித்துள்ளார். தான் மலங்கன் குடியிருப்பு சென்று பார்த்ததில் தனது மகள் இறப்பில் மர்மம் இருப்பதாக ஜெயங்கொண்டம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுசாமி வழக்கு பதிந்து விசாரித்ததில் சிவாகாமியின் தற்கொலைக்கு செல்வதுரை தூண்டுதலாக இருந்ததாக கைது செய்யப்பட்டு விசாரித்து வருகிறார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மலங்கன்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் செல்வதுரை (வயது33). இவருக்கும் செந்துறை அருகே உள்ள பூமுடையான் குடிகாடு கிராமத்தை சேர்ந்த சின்னப்பா-செல்லம்மாள் தம்பதியரின் மகள் சிவகாமி(24) க்கும் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது 9 பவுன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், ரூ.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவை சீர்வரிசையாக வழங்கப்பட்டன. இந்தநிலையில் மேலும் 10 பவுன் நகை வாங்கி வரச் சொல்லி சிவகாமியை செல்வதுரை குடும்பத்தினர் வீட்டை விட்டு துரத்தி விட்டதாக கூறப்படுகிறது. அதற்கு சிவகாமியின் பெற்றோர், விரைவில் 10 பவுன் போடுவதாக சொல்லி சிவகாமியை மருமகன் வீட்டில் விட்டு சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் சிவகாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து செல்வதுரை ஜெயங்கொண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடைவிடுமுறையின் போது பள்ளி பஸ்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்ட பள்ளி பஸ்கள் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இம்மாவட்டத்தில் 146 பள்ளி பஸ்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 96 பஸ்களை மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரன் மேற்பார்வையில், வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது பள்ளி பஸ்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி பொருத்தப்பட்டு இருக்கிறதா? அவசரகால வழிகள் சீராக உள்ளனவா? பஸ்களின் படிக்கட்டுகள் மாணவ-மாணவிகள் ஏறி செல்வதற்கு வசதியாக இருக்கின்றனவா? முதல் உதவி சிகிச்சை பெட்டிகள் இருக்கிறதா என்பது உள்ளிட்ட கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் 23 பஸ்களில், முதல் உதவி சிகிச்சை பெட்டி இல்லாதிருத்தல், வேகக்கட்டுப்பாட்டு கருவி குறித்த வாசகம் எழுதாதிருத்தல் உள்ளிட்ட சிறு, சிறு வாகன விதிமுறை குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என டிரைவர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த பஸ்களின் குறைகளை சரி செய்து மீண்டும் சில நாட்களுக்குள் ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் டிரைவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் மீதமுள்ள பஸ்கள் ஒர்க்ஸாப்பில் வேலைக்காக விடப்பட்டிருப்பதாலும், ஏனைய சில காரணங்களாலும் ஆய்வுக்கு வரவில்லை. இதனால் அந்த பஸ்கள் வருகிற 30-ந் தேதிக்குள் வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு கருதி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி பஸ்கள் ஆய்வு செய்யப்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் தினமும் 100 டிகிரிக்கு மேல் கோடைவெயில் கொளுத்தி வந்தது. பின்னர் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் வெயிலின் அளவு மேலும் அதிகமாக இருக்கும் என்று பொதுமக்கள் பயந்து வந்தனர்.
இந்தநிலையில் ஓரிரு நாட்கள் மட்டுமே அக்னி நட்சத்திரம் வெயில் கொளுத்தி வந்த நிலையில் வானிலை திடீரென மாற்றம் ஏற்பட்டு மழை பெய்யத் தொடங்கியது.அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பூமி குளிர்ச்சி அடைந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அரியலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை வரை நீடித்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அரியலூர்-67, ஜெயங்கொண்டம்-45, செந்துறை-16, திருமானூர்-38.2, மொத்த மழை அளவு-166.2. சராசரி மழையளவு-41.55.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி சுண்டக்குடி சோழீஸ்வரர் சமேத பிரகன் நாயகி கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி சுண்டக்குடி சோழீஸ்வரர் சமேத பிரகன் நாயகி முன்பு உள்ள நந்தி பகவானுக்கு மஞ்சள், அரிசி மாவு, விபூதி, சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் பனங்கூர் கிராமத்தில் உள்ள காளகஸ்தி சமேத நானாம்பிகை கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆண்டிமடம் அகத்தீஸ்வரர் கோவில்ஆண்டிமடம் விளந்தை மேல அகத்தீஸ்வரர் கோவில், ஆண்டிமடம் திருக்களத்தூர் திருக்கோடி வலத்தீஸ்வரர் சமேத சிவகாமி அம்பாள் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. விழாவையொட்டி கோவில் சன்னதி முன்பு உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
பிரதோஷ வழிபாட்டில் ஆண்டிமடம், விளந்தை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மீன்சுருட்டி பிரகதீஸ்வரர் கோவில்மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், தா.பழூர் விசாலாட்சி சமேத விசுவநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
விழாவையொட்டி கோவில் சன்னதி முன்பு உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் தா.பழூர், காரைக்குறிச்சி, சிந்தாமணி, இடங்கண்ணி, தாதம் பேட்டை, கோடங்குடி, வாழைக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வெங்கனூர் ஈஸ்வரன் கோவில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்து உள்ள வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
விழாவையொட்டி விருத்தாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வெங்கனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. குன்னம் அருகே உள்ள சு.ஆடுதுறை குற்றம் பொறுத்த அபராதரட்சகர் கோவில், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி கோவில் சன்னதி முன்பு உள்ள நந்தி பகவானுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் செட்டிகுளம், பொம்மனப்பாடி, நாட்டார்மங்கலம், குரூர், மாவலிங்கை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.






