என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் புதுப்பெண் சாவில் கணவன் கைது
ஜெயங்கொண்டம் அருகே திருமணமான மூன்று மாதத்தில் புதுப்பெண் மரணம் அடைந்துள்ளதால் கணவனை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் செந்துரை வட்டம் பூமுடையான் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பா, செல்லம்மாள் இவர்களின் மகள் சிவகாமி(24) இவருக்கும் ஜெயங்கொண்டம் மலங்கன் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் செல்வதுரை(33) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 2–ம் தேதி திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தில் மகளுக்கு 9 பவுன் நகை வீட்டு சாமான்கள், 90 ஆயிரம் பணம், உள்ளிட்ட சீர்வரிசைகள் செய்துருந்தனர்.
செல்வதுரை மற்றும் அவரது குடும்பத்திளளர் சேர்ந்து மேலும் 10 பவுன் நகை வரதட்சனை கேட்டு தகராறு செய்துள்ளதாகவும் இதனால் நேற்று முன்தினம் குடும்பத்தினரிடம் பஞ்சாயத்து பேசி மகளை விட்டு சென்றதாகவும் நேற்று காலை தனதுமகள் வீட்டில் தூக்குபோட்டு இறந்துவிட்டதாக செல்வதுரை தனக்கு தகவல் தெரிவித்துள்ளார். தான் மலங்கன் குடியிருப்பு சென்று பார்த்ததில் தனது மகள் இறப்பில் மர்மம் இருப்பதாக ஜெயங்கொண்டம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுசாமி வழக்கு பதிந்து விசாரித்ததில் சிவாகாமியின் தற்கொலைக்கு செல்வதுரை தூண்டுதலாக இருந்ததாக கைது செய்யப்பட்டு விசாரித்து வருகிறார்.

Next Story