என் மலர்tooltip icon

    அரியலூர்

    மீன்சுருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குலோத்துங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 34). அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் தங்கராசு என்கிற கங்காணி (65). இவர்கள் இருவரும் மாடுகளை வாங்கி விற்பனை செய்யும் இடைதரகர்களாக இருந்து வந்தனர்.

    மீன்சுருட்டி அருகே வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று காலையும் மாட்டு சந்தை நடைபெற்றது. அங்கு மாடுகளை விற்பதற்காக சரக்கு வேனில் முதலில் மாடுகளை அனுப்பி விட்டு ராமதாஸ், தங்கராசு மோட்டார் சைக்கிளில் இருவரும் வந்தனர்.

    இதையடுத்து அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மாடுகளை மாட்டுசந்தையில் விற்று விட்டு ராமதாஸ், தங்கராசு 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மீன்சுருட்டி அருகே சென்னை– கும்பகோணம் தேசியநெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, பின்னால் சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய ராமதாஸ், தங்கராசு 2 பேரும் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இதைபார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமதாஸ், தங்கராசு இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சென்னை–கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் உயிர் இழந்தது அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.
    மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்த சென்ற தாய் வீடு திரும்ப வில்லை. இது குறித்து கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
    திருமானூர் வாண்டாராயன் கட்டளை கிராமம் காலனிதெருவை சேர்ந்தவர் முருகபாண்டியன். இவரது மனைவி செண்பகம் (வயது22). இவருக்கு நித்திக்ரோஷன் என்ற 2 வயது குழந்தை உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று நித்திரோஷனுக்கு உடல்நிலை சரியில்லாததால் தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் காண்பிக்க 2 பேரும் சென்றனர். ஆனால் வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முருகபாண்டியன் மற்றும் அவரது உறவினர்கள் செண்பகம், நித்திக்ரோஷனையும் பல்வேறு இடத்தில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

    இது குறித்து திருமானூர் போலீஸ் நிலையத்தில் முருகபாண்டியன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செண்பகம், அவரது குழந்தை நித்திரோஷனையும் யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக்குழுவின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் குழந்தை தொழிலாளரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சரவணவேல்ராஜ் பேசினார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக்குழுவின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்வதை உறுதிப்படுத்தப்பட வேண்டும். குழந்தைகளுக்கு பாலியியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இதனை அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் கற்று தருவதை உறுதிச்செய்ய வேண்டும்.

    மேலும், குழந்தை திருமணங்கள் நடைபெறாத வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகள் இல்லங்களும் இளைஞர் நீதி சட்டத்தில் பதிவு செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.

    கூட்டத்தில், குற்றவியல் நீதித்துறை நடுவர்மகாலெட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பூமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதரணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், கோட்டாட்சியர்கள் மேகானராஜன் (அரியலூர்), ராஜகோபாலன் (உடையார்பாளையம்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கா.முகமது யூனிஸ்கான், ஒங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் அன்பரசி, வட்டாட்சியர்கள், மாவட்ட காவல்துறை அலுவலர்கள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    அரியலூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா வரும் 15-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா வரும் 15-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் அரியலூர் மாவட்ட தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் 2-ம் ஆண்டு புத்தகத் திருவிழா ஜுலை 24-ம் தேதி வரை நடைபெறும். இந்த புத்தக திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தினர் கடைகள் அமைக்க உள்ளனர். அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இதற்கான மேற்கூரை தடுப்புகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு ரூ.1 கோடியே 75 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையாயின. இந்த ஆண்டு அதைவிட அதிக தொகைக்கு புத்தகங்களை விற்பனை செய்ய புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இவ்விழா அரங்கில் தினமும் பிரபல சிந்தனையாளர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மிகவும் பின் தங்கிய கிராமப்புற பகுதிகளைக் கொண்டது அரியலூர் மாவட்டம் என்பதால் புத்தகத் திருவிழா நடைபெறுவது குறித்து அனைத்து பிகுதகளிலிருந்தும் மக்களை ஈர்க்கும் விதமாக போதிய அளவில் விளம்பரம் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு மாரத்தான் ஓட்டம், ஸ்கேட்டிங், பேச்சுப் போட்டி நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு விதங்களில் புத்தக திருவிழா தொடங்குவதற்கு 2 வாரங்களுக்கு முன்பே விளம்பரம் செய்யப்பட்டது. இந்த ஏற்பாடுகள் அரசு சார்பில் செய்யப்பட்டன.

    ஆனால் இம்முறை விழா தொடங்க சொற்ப நாட்களே இருக்கும் நிலையில் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படாதது குறித்து புத்தகப் பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
    செந்துறையில் அ.தி.மு.க. புதிய ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அலுவலகத்தை மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் , சந்திரகாசி எம்.பி. ஆகியோர் திறந்து வைத்தனர்.
    செந்துறை:

    செந்துறையில் அ.தி.மு.க. புதிய ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.  அலுவலகத்தை மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் , சந்திரகாசி எம்.பி. ஆகியோர் திறந்து வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சுரேஷ்,ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் உதயம் ரமேஷ், ஒன்றிய அவை தலைவர் த.செல்வம். ஒன்றிய குழு தலைவர் ஆ.செல்வராசு ,மாவட்ட கவுன்சிலர் குணசேகரன்.  ஒன்றிய செயலர்கள் ஜமால், ராமசாமி,  மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் முத்தமிழ்செல்வன்,  அன்பழகன் ,பொன் கலியமூர்த்தி, காரல்மாக்ஸ், ராஜாநிலா, கிளை செயலாளர்கள், தங்க குணசேகரன்,  புதுபாளையம்  பழனி முத்து மற்றும்  மாவட்ட ஒன்றிய கிளை கழக அ.தி.மு.க.  நிர்வாகிகள். முக்கிய  பிரமுகர்கள்  கலந்து கொண்டனர்.
    மீன் சுருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் பீரோவில் வைத்திருந்த 3 லட்சம் பணம் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள், மின் சாதனப்பொருட்கள் உட்பட அனைத்தும் எரிந்து நாசமாயின.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சம்போடை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது42). .இவருடைய தாய் அன்னலெட்சுமி (60). இவர்கள் இருவரும் தனது கூரை வீட்டில் வசித்து வந்தனர்.

    சம்பவத்தன்று மதியம் வழக்கம் போல் அன்னலெட்சுமி கூரை வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் அடுப்பில் இருந்து கூரை வீட்டில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர்.

    தீ மளமளவென நாலாபக்கமும் பரவியது. உடன் தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சங்கரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சு அடித்து தீயை அணைத்தனர். இதில் பீரோவில் வைத்திருந்த 3 லட்சம் பணம் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள், மின் சாதனப்பொருட்கள் உட்பட அனைத்தும் எரிந்து நாசமானதாக தெரிவித்தனர். இது குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி திடீரென மாயமானார்
    ஜெயங்கொண்டம் :

    அரியலூர் மாவட்டம் தாபழூர் அருகேயுள்ள கீழசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் - உஷாராணி தம்பதியினரின் மகள் சந்தியா (வயது17). இவர் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சந்தியா இரவு 7 மணியளவில் வீட்டின் திண்ணையில் படித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அவரது தாய் உஷாராணி வந்து பார்த்தபொழுது மகளை காணவில்லை. உடன் பக்கத்து வீடு மற்றும் தெருக்களில் தேடிப்பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபொழுது பீரோவில் இருந்த நான்காயிரம் பணம் மற்றும் சந்தியாவின் ஆடைகள் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.

    இதுகுறித்து உ‌ஷராணி தா.பழூர் போலீசில் தனது மகளை கண்டுபிடித்துக் கொடுக்ககோரி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிந்து தேடி விசாரித்து வருகின்றார்.

    அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தல் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இதில், அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் உள்விளையாட்டு அரங்க கட்டுமான பணிகளையும், வாலாஜாநகரத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி புணரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    ஜெ.சுத்தமல்லி நபார்டு வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் ஊரக கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பில் 15000 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அங்கு இயங்கி வரும் ரூ.26.5 இலட்சம் மதிப்பில் நிறுவப்பட்ட விதை சுத்திகரிப்பு இந்திரத்தினையும், ரூ.25 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விதை சுத்திகரிப்பு மையக் கட்டடத் தினையும் பார்வையிட்டு பணிகள் குறித்து அலுவலர்களிடம் விவரம் கேட்டறிந்தார்.பின்னர், ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பழைய கட்டடங்களை இடித்து சுத்தம் செய்யும் பணிகளையும், குருவாலப்பர் கோவில் தாமரைக்குளம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கொல்லாபுரம் கிராமத்தில் ரூ.1.60 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளி கட்டுமான பணிகளையும் பார்வையிட்ட அவர் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தவிட்டார்.

    ஆய்வின் போது, செயற்பொறியாளர் (கட்டுமானப் பணிகள்)எஸ்.அன்பரசன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரஸ்வதி கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், பொறியாளர் (ஊரக வளர்ச்சி முகமை) செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அரியலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் 8.7.2016 அன்று வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மூன்றாம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் 8.7.2016 அன்று வருவாய் வட்டாட்சியர் தலைமையில் பின்வருமாறு நடைபெற உள்ளது.

    அரியலூர் வட்டத்தில் கீழகாவட்டாங்குறிச்சி, உடையார்பாளையம் வட்டத்தில் ஜெயங்கொண்டம் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    ×