என் மலர்
உள்ளூர் செய்திகள்

உலக குழந்தைத்தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி
- அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
- அரியலூர் மாவட்டத்தில் 14 வயதிற்கட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியில் ஈடுபடுத்துவதும், 15 முதல் 18-வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்:
ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 12-ஆம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் 14 வயதிற்கட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியில் ஈடுபடுத்துவதும், 15 முதல் 18-வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இச்சட்டத்தினை மீறுவோருக்கு அதிகபட்சமாக ரூ.50,000/- அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். ௧௪ வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்பி கல்வி கற்றிட ஏற்பாடு செய்வது அனைவரின் கடமையாகும்.
அரியலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் எவரும் இல்லை என்ற நிலையினை உருவாக்கிட அனைவரும் பாடுபட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், தொழிலாளர் உதவி ஆணையர் விமலா, தொழிலாளர் ஆய்வாளர்கள் தேவேந்திரன், சம்பத் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.






