என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிமடம் அருகே ரூ.34.55 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர், எம்.எல்.ஏ. வழங்கினர்
    X

    ஆண்டிமடம் அருகே ரூ.34.55 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர், எம்.எல்.ஏ. வழங்கினர்

    • ஆண்டிமடம் அருகே ரூ.34.55 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • இந்நிகழ்வில் 143 பயனாளிகளுக்கு அனைத்து துறை திட்டத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீராமன் ஊராட்சியில், அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில், எம்.எல்.ஏ.கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் வரவேற்று பேசினார். இந்நிகழ்வில் 143 பயனாளிகளுக்கு அனைத்து துறை திட்டத்தின் மூலம் ரூ.34.55 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இதில் சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பழனிசாமி, தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் ஆனந்தன், கூட்டுறவுத்துறை இணை இயக்குனர் தீபாசங்கரி, கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் டாக்டர் சொக்கலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன், ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துணை இயக்குநர் அன்பரசி, மருத்துவ பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, மகளிர்திட்ட இணை இயக்குநர் முருகண்ணன், மாவட்ட தொழில்மைய மேலாளர் லெட்சுமி, ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன், மாவட்ட பிரதிநிதிகள் உதயகுமார், குணசேகரன், சிவஜோதி, ஊராட்சி மன்றத்தலைவர் சரஸ்வதி, ஒன்றிய குழு உறுப்பினர் இராமலிங்கம் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் வட்டாட்சியர் ரகுமான் நன்றி கூறினார்.


    Next Story
    ×