search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெசவாளர்கள் கோரிக்கைகளை அலுவலரிடம் தெரிவிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    நெசவாளர்கள் கோரிக்கைகளை அலுவலரிடம் தெரிவிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

    • நெசவாளர்கள் கோரிக்கைகளை அலுவலரிடம் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • அரசு அலுவலக வேலை நாட்களில் சந்திக்கலாம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட நெசவாளர்கள் தங்களது கோரிக்கைகளை, இதற்காக நியமிக்கப்பட்டுள்ள குறைதீர்க்கும் அலுவலரிடம் தெரிவித்து பயனடையலாம் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    கடந்த 23.3.2022 அன்று கைத்தறி துறை ஆணையரகத்தில் நெசவாளர் குறைதீர்க்கும் மையம் உருவாக்கப்பட்டு, பிரத்யேக மனுக்களை பரிசீலிக்கும் இணையதளமும் தொடக்கி வைக்கப்பட்டது. இம்மையத்துக்கான முகமை அலுவலர், குறைதீர்க்கும் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குறை தீர்க்கும் அலுவலரை அரசு அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரடியாக சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    இதற்கென உருவாக்கப்பட்ட பிரத்தியேக இணையதளத்தில் நெசவாளர்கள் தங்கள் குறைகளை பதிவேற்றம் செய்யலாம். 044 25340518 என்ற தொலைப்பேசி மூலம் தெரிவிக்கலாம்.

    நெசவாளர் குறை தீர்க்கும் மையம், கைத்தறி ஆணையரகம், குறளகம், 2 ஆம் தளம், சென்னை 600104 என்ற முகவரிக்கு துணை இயக்குநர் (அமலாக்கம்), குறை தீர்க்கும் அலுவலருக்கு முகவரியிட்டு கடிதம் மூலமாக தெரிவிக்கலாம். மேற்கண்ட வாய்ப்பினை நெசவாளர்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×