என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலி கிளினிக்
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலி கிளினிக் ஆரம்பம்
- எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய பாலி கிளினிக்கை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்.
இந்த பாலி கிளினிக்கில் திங்கள் கிழமையன்று பொது மருத்துவமும், செவ்வாய் அன்று மகப்பேறு மருத்துவமும், புதன்கிழமை அன்று குழந்தை நல மருத்துவமும், வியாழக்கிழமை அன்று கண் மருத்துவமும், வெள்ளிக்கிழமை அன்று பல் மருத்துவமும், சனிக்கிழமை அன்று மனநல மருத்துவமும் என மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை பார்க்கப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட சுகாதார துணை இயக்குனர் மருத்துவர் கீதாராணி தெரிவித்தார்.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், நகர்மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், அனைத்து மருத்துவர்களும், மாநில திமுக சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர் கணேசன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






