என் மலர்
உள்ளூர் செய்திகள்

பசுபதீஸ்வரர் கோவில் லிங்கத்தின்மேல் சூரியஒளி விழுந்த அபூர்வ காட்சி
- பசுபதீஸ்வரர் கோவில் லிங்கத்தின்மேல் சூரியஒளி விழுந்த அபூர்வ காட்சி நேற்று நிகழ்ந்தது.
- பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காரைக்குறிச்சி சவுந்தரவல்லி தாயார் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. ஆண்டுக்கு 2 முறை கோவில் கருவறையில் உள்ள லிங்க திருமேனி மீது சூரியன் தனது கதிர்களை பாய்ச்சி வழிபடுவது இந்த கோவிலின் சிறப்பு அம்சமாகும்.
இந்த ஆண்டு சித்திரை மாத சூரிய வழிபாடு நடைபெற்ற முடிந்த நிலையில் ஆவணி மாத சூரிய வழிபாடு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 18-ந் தேதி லேசாக சூரிய கதிர்கள் திருமேனி மீதுபட்டது. அடுத்த இரண்டு நாட்கள் மேகமூட்டமாக இருந்ததால் சூரிய வழிபாடு நடைபெறவில்லை. இன்று காலை 6 மணி 5 நிமிடத்திற்கு சூரிய பகவான் தனது ஆயிரம் கரங்களை நீட்டி காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் பாதங்களை சரணாகதி அடைந்த நிகழ்வு நடந்தேறியது. அடுத்த ஐந்து நிமிடங்களில் சிறிது சிறிதாக லிங்கத் திருமேனி மீது முழுவதும் சூரிய கதிர்கள் படர்ந்து லிங்க திருமேனி தங்கத்தை உருக்கி ஊத்தியது போல் தகதகவென மின்னியது. இந்த அதிசய நிகழ்வை திரளான பக்தர்கள் கண்டு வழிபட்டு வருகின்றனர்."






