search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் வந்த சாதனை மாணவிக்கு   மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு
    X

    அரியலூர் வந்த சாதனை மாணவிக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு

    • அரியலூர் வந்த சாதனை மாணவிக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
    • ஆசிய சதுரங்க போட்டி

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன். நெசவு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அன்புரோஜா. குழந்தைகளுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இளையமகள் சர்வாணிகா (வயது 7). இவர் அப்பகுதியில் உள்ள மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சர்வாணிகா, செஸ் போட்டியில் ஆர்வம் அதிகம் கொண்டதால் பெற்றோர் அவருக்கு உரிய பயிற்சியினை அளித்தனர். ஒன்றிய அளவிலான மண்டல அளவிலான, மாவட்ட அளவிலான போட்டிகள் என பல்வேறு போட்டிகளில் 7 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட சர்வாணிகா வெற்றி பெற்ற சாதித்து உள்ளார்.

    இந்நிலையில் இலங்கையில் கடந்த 3-ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்ற 16-வது ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற சர்வாணிகா 3 பிரிவுகளிலும் வெற்றி பெற்று சா தனை படைத்துள்ளார். 7 வயதுக்குட்பட்டோருக்கான முதல் பரிவில் நடைபெற்ற 7 சுற்றுகளிலும் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டாம் பிரிவல் நடைபெற்ற 7 சுற்றுகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து நடைபெற்ற மூன்றாம் பிரிவில் 9 சுற்றுகளில் வெற்றி பெற்றார்.இதன் மூலம் 3 பிரிவுகளில் நடைபெற்ற 23 ஆட்டங்களிலும் வெற்றியை பெற்று, ஆசிய அளவில் புதிய சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். 3 பிரிவுகளிலும் த ங்க பதக்கங்கள் மற்றும் அணிக்கான பதக்கங்கள் உட்பட மொத்தம் 6 தங்கப்பதக்கங்களையும், 3 கோப்பைகள் மற்றும் அணிக்கான கோப்பைகள் உட்பட மொத்தம் 5 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனே உள்ளிட்ட பல வெளிநாட்டு அதிபர்களும் பாராட்டியுள்ளனர். அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து,நேற்று மாலை உடையார்பாளையத்திற்கு சர்வாணிகா வருகை தந்தார். அவரை ஊர் பொதுமக்கள் மின் விளக்குகள் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி வைத்து மேளதாளங்கள் முழங்க வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    Next Story
    ×