என் மலர்
உள்ளூர் செய்திகள்

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
- போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கபட்டது
- சான்றிதழ்களை எஸ்.பி. வழங்கினார்
அரியலூர்,
போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி அரியலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி. கா.பெரோஸ்கான் அப்துல்லா தலைமை தாங்கி, போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக நடைபெற்ற பேச்சுப் போட்டி, நாடகப் போட்டி ஓவியப் போட்டிஉள்ளிட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் முத்துகிருஷ்ணன், கூடுதல் எஸ்.பி. அந்தோணி ஆரி, டி.எஸ்.பி. சங்கர் கணேஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
Next Story






