என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் அரிமா சங்கம் புதியநிர்வாகிகள் பதவியேற்பு விழா
- அரியலூரில் ராயல் சென்டினியல் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முன்னாள் தலைவர் சந்திரசேகர் தலைமையில நடை பெற்றது.
- நிகழ்ச்சியில் துணை ஆளுநர் சவுரிராஜ், மாவட்ட உறுப்பினர் வளர்ச்சித் தலைவர் மகேந்திரன், மாவட்ட தலைவர் விஜயலட்சுமி சண்முகவேல், சரவணன், மண்டல தலைவர் டென்சி, வட்டாரத் தலைவர் சங்கர், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
அரியலூர்:
அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராயல் சென்டினியல் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முன்னாள் தலைவர் சந்திரசேகர் தலைமையில், சாசன தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் நடை பெற்றது. அனைவரையும் ஜெயராமன் வரவேற்று பேசினார்.
2022 -23 புதிய நிர்வாகிகள், தலைவராக காமராஜ், செயலாளராக மாலா தமிழரசன், பொருளாளராக ஆனந்தன், நிர்வாக அலுவலராக சக்திவேல், இயக்குனர்களாக டில்லிராஜ், ராஜேந்திரன், கொளஞ்சிநாதன், முருகேசன், ராஜா, குமரன், நாகராஜன், சரவணன், பிரபாகரன், ஜெயராமன், மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக ராஜசேகரன், முரளிதரன், முத்துக்குமார், செந்தில்குமார், செல்வராஜ், மானக்ஷா, பாலசுப்பிரமணியன், மோகன்ராஜ் ஆகியோர்கள் பணியேற்று கொண்டனர்.
நிகழ்ச்சியில் துணை ஆளுநர் சவுரிராஜ், மாவட்ட உறுப்பினர் வளர்ச்சித் தலைவர் மகேந்திரன், மாவட்ட தலைவர் விஜயலட்சுமி சண்முகவேல், சரவணன், மண்டல தலைவர் டென்சி, வட்டாரத் தலைவர் சங்கர், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.






