என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை கூட்டம்
- ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்திற்கு ஜெயங்கொண்டம் நகர கழக செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் வார்டில் அ.தி.மு.க. நகர கழக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை, முன்னாள் உறுப்பினர் புதுப்பித்தல் மற்றும் பூத் கமிட்டி அமைக்கும் கலந்தாய்வு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜெயங்கொண்டம் நகர கழக செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு உறுப்பினர் படிவம் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும், பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்து தொண்டர்களும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்று கூறினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், மாநில நிர்வாகி அறிவு, செங்குந்தபுரம் வார்டு கவுன்சிலர்கள் தங்கபாண்டியன், சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






