என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சியுடன்வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை-அமைச்சர் கணேசன் தகவல்
    X

    அரியலூர் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சியுடன்வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை-அமைச்சர் கணேசன் தகவல்

    • அரியலூர் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சியுடன் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என அமைச்சர் கணேசன் தெரிவித்தார்
    • ஒரு அரசு தொழிற்பயிற்சி மையத்திற்கு ரூ.34.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், அரியலூர் தொழிற்பயிற்சி மையத்தினை தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்கணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகராவ்முன்னிலையில் நடைபெற்றது. தொழிற்பயிற்சி மையத்தினை ஆய்வு செய்து மாணவர்களுடன், மாணவர்கள் மேற்கொண்ட செய்முறைகள் குறித்து கேட்டறிந்த பின் அமைச்சர் அதன் பின்னர் தெரிவித்ததாவது, இன்றைக்கு இருக்கின்ற நவீன தொழில் நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் புதிய முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள்.

    இவ்வகையான தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் வகையில் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பயிற்சி மாணவர்களுக்கு வழங்கும் விதமாக ரூ.2,878 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய தொழில்நுட்ப மையங்களை உருவாக்கிடும் வகையில் டாடா டெக்னாலஜியுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி மையங்களில் புதியதாக தொழில் நுட்ப மையங்கள் ஏற்படுத்தப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதில் பணிகள் முடிவுற்ற 22 தொழில்நுட்ப மையங்கள் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 49 அரசு தொழில்பயிற்சி மையங்களில் இம்மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த அயல்நாட்டில் வழங்கப்பெறும் பயிற்சிகள் அனைத்தும், இத்தொழில் நுட்ப மையங்கள் மூலமாக மாணவர்களுக்கு கிடைக்கப்பெறும். இதனை முதலமைச்சர் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் செயல்படுத்தியுள்ளார்.

    மேலும் தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டெக்னாலஜியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி ஒரு அரசு தொழிற்பயிற்சி மையத்திற்கு ரூ.34.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாணவர்கள் இங்குள்ள சிமெண்ட் ஆலைகளில் பணிபுரிவதற்கான நவீன தொழில்நுட்பங்களை பயின்று வேலை வாய்ப்பை பெறும் வகையில் தொழில்நுட்ப மையங்களில் பயிற்சி வழங்க முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வில் விழுப்புரம் மண்டல பயிற்சி இணை இயக்குநர் திரு.ஜான் போஸ்கோ, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு.நாகராஜன், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×