என் மலர்
உள்ளூர் செய்திகள்

விதிமுறைகளை மீறும் தனியார் உர நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- விதிமுறைகளை மீறும் தனியார் உர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது
- அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழுர் ஊராட்சி ஒன்றியத்தில் தனியார் உரவிற்பனை நிலையங்களை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், தனியார் உரவிற்பனை நிலையங்களில் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் இருப்பு, உரங்களின் விலை, உரங்கள் இருப்புப் பதிவேடு, விற்பனைப் பதிவேடு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட விற்பனை ரசீது, உரங்களின் சரியான எடை அளவு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விற்பனையாளர்களிடம் கேட்டறிந்தும், பதிவேடுகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.
விதிமுறைகளை மீறி செயல்படும் தனியார் உரவிற்பனை நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட வேளாண் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, தா.பழூர் ஒன்றியம், உல்லியக்குடி ஊராட்சி அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமினையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையல் கூடத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு சமைக்கப்பட்டு வரும் உணவினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.






