என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆம் ஆத்மி கட்சி கலந்தாய்வு கூட்டம்
- ஆம் ஆத்மி கட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
- நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார் பாளையத்தில் கண்ணனூர் மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஆம் ஆத்மி கட்சியின் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திருமுருகன் முன்னிலை வகித்தார். நகரத் தலைவர் சண்முகம் வரவேற்புரை நிகழ்த்தினார். மண்டல தலைவர் தேவகுமார் கட்சியின் கொள்கை பற்றியும் செயல்பாடு பற்றியும் கட்சி தொண்டர்களிடம் விளக்கிப் பேசினார்.
இதில் ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளராக மகாராஜனும் தாப்பழுர் ஒன்றிய செயலாளர் சின்னத்துரை மற்றும் செல்வராஜ் செந்துறை ஒன்றிய செயலாளராக உத்தமசோழன் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட பொருளாளராக சுப்ரமணியன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட துணை தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.






