என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுப்பயிர் சாகுபடிக்கு 50 சதவீத மானியம்
- மாற்றுப்பயிர் சாகுபடிக்கு 50 சதவீத மானியம் வழங்கபடும்
- மாற்றுப் பயிர் சாகுபடி தொகுப்பை பெற உழவன் செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர்ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டத்தில், மாற்றுப்பயிர் சாகுபடியினை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சிறுதானியங்கள், பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் சாகுபடிக்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள் நுண்ணுட்டக்கலவை ஆகிய பொருள்கள் அடங்கிய மாற்றுப்பயிர் சாகுபடி தொகுப்பு 50 சதவீத மானியத்திலும், பசுந்தாழ் உர விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
மொத்த இலக்கில் 19 சதவீதம் ஆதிதிராவிட விவசாயிகளுக்கும், 1 சதவீதம் பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும். சிறுதானிய தொகுப்பு அதிகபட்சமாக 1 ஏக்கருக்கு ரூ.1,150 (50%மானியம்). பயிறுவகை சாகுபடி தொகுப்பு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூ.1740 (50%மானியம்) எண்ணெய் வித்து சாகுபடி தொகுப்பு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூ.4700 (50% மானியம்) கடந்த 2 ஆண்டுகளில் பயன் பெறாத விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேற்கண்ட மாற்றுப் பயிர் சாகுபடி தொகுப்பை பெற உழவன் செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். ஓடிபி விவசாயிகளின் கைபேசிக்கு வரும். மேலும் விவரங்களுக்கு திருமானூர், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.






