என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு
  X

  சாதனை படைத்த மாணவிகளை போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பாராட்டினார்.

  தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சம்ரிதா தங்க பதக்கத்தையும், விசாலினி வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.
  • மாநில போட்டியில் வெற்றி பெற்று தேர்வாகி தேசிய போட்டியிலும் வெற்றி பெற்றனர்.

  தஞ்சாவூர்:

  பெங்களூரில் சி.ஐ.எஸ்.சி.இ. ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ்- 2022 தேசிய அளவிலான கராத்தே போட்டி பதுகோன்-டிராவிட் சென்டர் ஃபார் ஸ்போர்ட்ஸ் எக்ஸலென்சியில் நடைபெ ற்றது.

  தலைமை பயிற்சியாளர் சென்சாய் ராஜேஷ் கண்ணா தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  அதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சம்ரிதாதங்க பதக்கத்தையும்,விசாலினி வெண்கல பதக்கத்தையும் பெற்றனர். பக்கா லொகேஷ்வர ரெட்டி தர்ஷன் கலந்து கொண்டனர்.

  மாநில போட்டியில் வெற்றி பெற்று தேர்வாகி தேசிய போட்டியிலும் வெற்றி பெற்றனர்.

  சாதனை படைத்த மாணவ ர்களை தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா வாழ்த்தி பாராட்டினார். ஹயாஷிகா சிட்டோ ரியு கராத்தே கழகத்தின் கிராண்ட் மாஸ்டர் ஹன்சி டாக்டர் டோனி பொன்னையா போன் மூலமாக வாழ்த்து தெரிவித்தார்.

  இதேப்போல் கிறிஸ்து பன்னாட்டு பள்ளி தாளாளர் ஜெரால்டு பிங்னோரா ராஜ், ராஜ தாமரை மஹால் உரிமையாளர் சிங்காரவேல், உடற்பயிற்சி ஆசிரியர் சியாம் சுந்தர் மற்றும் வின்னர் அகாடமி உரிமையாளர் ரெங்கநாயகி அனைவரும் மாணவர்களை வாழ்த்தி பாராட்டினர்.

  Next Story
  ×