என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம், வெற்றி பெற்ற ஊர்க்காவல் படையினருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
சாதனை படைத்த தருமபுரி ஊர்காவல் படையினருக்கு பாராட்டு விழா
- தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 27 ஊர்காவல் படையினர் விளையாட்டுப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.
- எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம், வெற்றி பெற்ற ஊர்க்காவல் படையினருக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
தருமபுரி,
திருவண்ணாமலையில் கடந்த மாதம் ஊர்க்காவல் படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
இந்த விளையாட்டு போட்டியில் மாநில முழுவதும் உள்ள ஊர்காவல் படையினர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 27 ஊர்காவல் படையினர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.
இதனை அடுத்து நேற்று தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் முதலிடம் பிடித்த ஊர் காவல் படையினருக்கு பாராட்டு விழா நடந்தது.
எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம், வெற்றி பெற்ற ஊர்க்காவல் படையினருக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் தண்டபாணி இன்ஸ்பெக்டர் அன்பழகன் செல்வமணி மற்றும் ஊர் காவல் படையினர் கலந்து கொண்டனர்.






