search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
    X

    தருமபுரியில் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

    • தருமபுரி மாவட்ட கலெக்டரக வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • சிறுதானிய உணவகம் நடத்திட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் (SHG), உற்பத்தியாளர் குழுக்கள் (NRLM Portal)-லில் பதிவு பெற்றிருந்தல் வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டு ள்ளது.

    2023-ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட முடிவு செய்துள்ளது.

    அதன்படி தருமபுரி மாவட்ட கலெக்டரக வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவானது சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசு சிறுதானிய உணவு வகைகளை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    சிறுதானிய உணவகம் நடத்திட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் (SHG), உற்பத்தியாளர் குழுக்கள் (NRLM Portal)-லில் பதிவு பெற்றிருந்தல் வேண்டும். கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு "ஏ" அல்லது "பி" சான்று பெற்றிருக்க வேண்டும்.

    உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு சிறுதாளிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும்.

    மேலும், இது குறித்து விரிவான விவரங்களை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை அணுகி தெரிந்துக் கொள்ளலாம். மேலும், நாளை 21.07.2023 வெள்ளிக்கிழமைக்குள் அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×