search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையம் உயர்மட்ட பாலம் பணிகளை துரிதப்படுத்த வேண்டுகோள்
    X

    பாலம் கட்டும் இடத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர்.

    குமாரபாளையம் உயர்மட்ட பாலம் பணிகளை துரிதப்படுத்த வேண்டுகோள்

    • குமாரபாளையம் உயர்மட்ட பாலம் அமைக்க நீண்ட வருடமாக பல அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • இதனால் பாதை துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பல கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தம்மண்ணன் சாலையில் அப்பன் மேடு பகுதியில் கோம்பு பள்ளத்தில் தரைமட்ட பாலம் உள்ளது. மழைக்காலங்களில் சிறிய மழை பெய்தாலும் கோம்பு பள்ளம் கழிவுநீர் தரைமட்ட மட்ட பாலத்தின் மேலே செல்லும் நிலை ஏற்படும். இதனால் பாதை துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பல கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது.

    இந்த இடத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க நீண்ட வருடமாக பல அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். புதியதாக பொறுப்பேற்ற சேர்மன் விஜய்கண்ணன் இதனை கருத்தில் கொண்டு உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக மூலதன மானிய நிதியில் இருந்து 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மூன்று மாதங்கள் முன்பு பூஜை போடப்பட்ட நிலையில், இதன் கட்டுமான பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

    பள்ளிகள், கல்லூரி செல்லவும், ஜவுளி உற்பத்திக்கு தேவையான நூல்கள் கொண்டுவரவும், உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகள் ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்கள் செல்லவும் இந்த பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது பல கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். பலரது சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த பாலம் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×