search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆசிரியர்கள் 29-ந்தேதி கோட்டை நோக்கி பேரணி
    X

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆசிரியர்கள் 29-ந்தேதி கோட்டை நோக்கி பேரணி

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று மதுரையில் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் மாநிலத் தலைவர் மூ.மணி மேகலை தலைமையில் நடைபெற்றது.

    துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன் முன்னிலை வகித்தார். எஸ்.டி.எப்.ஐ. பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜாண் கிறிஸ்துராஜ் வரவேற்புரை ஆற்றினார். மாநிலப் பொருளாளர் ஜீ.மத்தேயு நன்றி கூறினார்.

    கூட்ட முடிவுகள் குறித்து மாநில பொதுச்செயலாளர் ச.மயில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை. எனவே, தி.மு.க அரசு தனது தேர்தல் அறிக்கையில் எழுத்து மூலமாகக் கொடுத்த வாக்குறுதிகளின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    1.6.2009-க்குப் பின்பு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள மூவர் குழுவின் அறிக்கையை விரைவாகப் பெற்று ஊதிய முரண்பாடுகளை களைவதுடன், மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழ்நாட்டின் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

    அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயிலும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலைச் சிற்றுண்டித் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும், சலுகைகளும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

    தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்மு றையீடு செய்வதோடு, பதவி உயர்வுக்குத் தகுதித் தேர்வு தேவையில்லை என்பதைக் கொள்கை முடிவாக அறி விக்க வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலி யாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களை மாணவர்களின் கல்வி நலன் கருதி காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை விரைந்து பெற்று புதிய மாநிலக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும்.

    ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன், சமூக நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வருகிற 29-ந்தேதி சென்னையில் நடைபெறும் கோட்டை நோக்கிப் பேரணியில் 10 ஆயிரம் ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்திட மாநிலச் செயற்குழு முடிவு செய்துள்ளது.

    மேலும், தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ ரத்து செய்தல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 3-ந்தேதி டெல்லியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நடத்தும் பேரணியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 500 ஆசிரியர்கள் பங்கேற்பதெனவும் மாநில செயற்குழு முடிவு செய்து உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×