search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் நடைபயணம் சென்ற அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு
    X

    கடையம் பகுதியில் நடைபயணம் செய்த அண்ணாமலைக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்த காட்சி.

    தென்காசியில் நடைபயணம் சென்ற அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு

    • அண்ணாமலையின் 2-ம் கட்ட பாதயாத்திரை பொட்டல்புதூரில் தொடங்கியது.
    • விவசாயிகள் சார்பில் அண்ணாமலைக்கு ஏர் கலப்பை பரிசாக வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தமிழக பாரதீய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் 2-ம் கட்ட பாதயாத்திரை நேற்று மாலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பொட்டல்புதூரில் தொடங்கியது. தொடர்ந்து திருமலையப்பபுரம், ரவனசமுத்திரம் விலக்கு, முதலியார்பட்டி வழியாக அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டார்.

    உற்சாக வரவேற்பு

    சாலையில் வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களில் சென்ற பயணிகளிடம் கையசைத்தவாறு சுமார் 4 கிலோமீட்டர் நடை பயணம் செய்த அவருக்கு வழி நெடுகிலும் நின்ற பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் மாலைகள் மற்றும் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

    கடையம் பகுதிக்கு வந்தவுடன் அண்ணாமலைக்கு விவசாயிகள் சார்பில் ஏர் கலப்பை பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் கடையம் மெயின் பஜார் வழியாக லாலா கடை மூக்கு பகுதிக்கு சென்ற அண்ணாமலை அந்தப் பகுதியில் பா.ஜ.க. கொடியை ஏற்றி வைத்தார்.

    அதனை முடித்துக் கொண்டு இரவு தென் காசியில் உள்ள கீழப்புலியூர் ெசன்ற அண்ணாமலை கீழப்புலியூர் வாய்க்கால் பாலம் நீதிமன்ற கட்டிடம் பகுதி பழைய பஸ் நிலையம் மேம்பாலம் வழியாக தென்காசி புதிய பஸ் நிலையம் வரை சுமார் 6 கிலோமீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டார்.

    நீதிமன்ற கட்டிடம் அருகில் வந்த போது பெண்கள் சார்பில் முளைப்பாரி எடுத்து வரவேற்பு அளிக்க ப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் பேசுவதற்கு அனுமதி இல்லை என்பதால் கூட்டத்தில் கலந்து கொண்ட வர்களிடம் தாமதம் ஆனதற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்பதாக அண்ணாமலை கூறினார்.

    மேலும் 2024 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. உறுதியாக வெற்றி பெறும். இந்த மாதம் முடிவதற்குள் பயணத்தில் ஒரு நாள் விடுப்பு எடுத்து தென்காசியில் பொதுக் கூட்டம் நடத்தி அதில் நான் உங்களிடம் பேசுவேன் என்றும் தெரிவித்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, தென்காசி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவருமான விஸ்வை ஆனந்தன், பா.ஜ.க. மாநில முன்னாள் பிரசார பிரிவு அணி துணைத் தலைவரும், அகில பாரத அய்யா வழி மக்கள் பேரியக்கத்தை சேர்ந்தவருமான சுவாமிதோப்பு ஸ்ரீவைகுண்ட வரகவி ஸ்ரீ குரு சிவச்சந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பால குருநாதன், அருள்செல்வன், ராமநாதன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் மகாராஜன், மாநில பொதுச்செயலாளர், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைச் செயலாளர் மருதுபாண்டியன், பொன் பாலகணபதி, மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் செந்தூர்பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×